"விதி மீறிவிட்டார்".. ஆளுநர் சுயமாக வாசித்த பகுதி அதிரடி நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் ஆவேச தீர்மானம்
சென்னை: தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாகவும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து ஆளுனர் சுயமாக வாசித்த பகுதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசு தயாரித்த முழு உரை மட்டும் அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு நிதி நிலைமையின் முன்னேற்றம் குறித்தும், கடந்த ஒன்றரை வருட ஆட்சியின் சிறப்புகள் குறித்தும் பேசினார்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு, தமிழக அரசு என்ற பெயர் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்ட தொடரில் தமிழ்நாடு என்பதை ஆளுநர் உச்சரிப்பாரா? அல்லது தமிழகம் என மாற்றி சொல்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து இன்று சட்டசபையில் "தமிழ்நாடு" என்று கூறி ஆளுநர் ஆர். என் ரவி தொடக்கத்தில் பேசினார். ஆனால் மற்ற இடங்களில் இந்த அரசு என்று கூறி அவர் பேசியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் ரவி பயன்படுத்தவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு
சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார் ஆளுநர் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசு என்று கடைசி கட்டங்களில் அவர் சொல்லவில்லை. மாறாக இந்த அரசு என்று கூறியுள்ளார். இந்த பாகத்தில் இருந்த பெரியார் போன்ற தலைவர்களின் பெயர்களை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. பொதுவாக ஆளுநர் உரைகளை, ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான். இதை ஆளுநர்கள் அப்படியே வாசிப்பதுதான் வழக்கம்.

தமிழ்நாடு அரசு
இன்று தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசிக்காமல் அவர் சில பாகங்களை தவிர்த்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாகவும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரையில், ஆளுநர் ரவி உரையில் தமிழ்நாடு அரசு இயற்றிய பாகங்கள் சில இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டுவிட்டார். இதனால் அவரின் உரையில் சுயமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கிறேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது.

ஆளுநர் உரை
கொள்கைக்கு மாறாக அவர் செயல்பட்டு உள்ளார். சட்டசபை விதிகளின்படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல். ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதையடுத்து ஆளுநர் படித்த உரை வாக்கெடுப்பு மூலம் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. அந்த உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த உரையை நிகழ்த்தும் போது ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் அவையில் இருந்தே வெளியேறினார்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications