"தமிழ்நாடு அரசின் சாதனை".. ஆளுநர் ஆர்.என் ரவி உரையில் பாராட்டு.. சட்டசபையில் இதை நோட் பண்ணீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு நிதி நிலைமையின் முன்னேற்றம் குறித்தும், கடந்த ஒன்றரை வருட ஆட்சியின் சிறப்புகள் குறித்தும் பேசினார்.

தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

பொதுவாக ஆளுநர் உரைகளை, ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான். இதை ஆளுநர்கள் அப்படியே வாசிப்பதுதான் வழக்கம். இன்றும் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசித்தார். இந்த உரையில் தமிழ்நாடு அரசை பாராட்டும் வரிகள் இடம்பெற்று இருந்தன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் நடந்த ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்பது சர்ச்சையானது.

வார்த்தை சர்ச்சை

வார்த்தை சர்ச்சை

அந்த வருடம் அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஏன் இந்த வார்த்தையை சொல்லவில்லை, தமிழ்நாடு அரசு தனது உரையில் அந்த வார்த்தையை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அதன்பின் மீண்டும் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாள் உரையில் ஆளுநர் ஜெய் ஹிந்த் என்று கூறினார். அதேபோல் இந்த முறை தமிழ்நாடு அரசு, தமிழக அரசு என்ற பெயர் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்ட தொடரில் தமிழ்நாடு என்பதை ஆளுநர் உச்சரிப்பாரா? அல்லது தமிழகம் என மாற்றி சொல்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆளுநர்

ஆளுநர்

இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு அரசு தலைமை செயலக வளாகத்தில் தமிழ்நாட்டு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி செழியன், தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர் . பின்னர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவப்பு கம்பள விரிப்புடன் சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டார். காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி தமது உரையை வாசிக்க தொடங்கினார். இந்த உரைகள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆட்சியின் சிறப்புகள்

ஆட்சியின் சிறப்புகள்

இந்த நிலையில் ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு நிதி நிலைமையின் முன்னேற்றம் குறித்தும், கடந்த ஒன்றரை வருட ஆட்சியின் சிறப்புகள் குறித்தும் பேசினார். தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை வருடத்தில் உயர்ந்து உள்ளதாக பேசினார். தமிழ்நாட்டில் முதலீடுகள் உயர்ந்து உள்ளதாக பேசினார். பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையில் பாராட்டினார். அதோடு வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு அரசு தீவிரமாக சிறப்பாக எதிர்கொண்டது. சென்னையில் வெள்ள நீர் வடிகால் அமைப்புகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு சாதனை செய்துள்ளது.

16 லட்சம்

16 லட்சம்

தமிழ்நாடு முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 16 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது. குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணை 19 நாட்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்டது. இதனால் குருவை சாகுபடி விரைவாக நடந்துள்ளது. பால்களில் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டிக்கு இருப்பதால் இழப்பை சந்தித்து உள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு தொடர்ந்து இழப்பீடு வழங்க வேண்டும்.

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி மாணவர்கள் கொரோனாவிற்கு பின் கல்வியை நோக்கி திரும்ப உதவுவதாக சர்வதேச ஆய்வு அறிக்கை ஒன்று சொல்கிறது. முல்லைப்பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்று குடியரசுத் தலைவரிடம் நிலுவையும் உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு 1000 ரூபாய் உட்பட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்று ஆளுநர் ஆர். என் ரவியின் உரையில் இடம்பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+