தமிழ்நாடு சட்டசபையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.. இந்த ஆண்டும் வெளிநடப்பா? பரபரக்கும் கோட்டை!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை உரையாற்றுகிறார். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைகளின் மையமாக இருப்பாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்க உள்ளது. ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் மொழி பெயர்த்து வாசிப்பார். இதனைத் தொடர்ந்து சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடி சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை முடிவு செய்யும். பிப்ரவரி 19-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்; பிப்ரவரி 20-ந் தேதி முன்பண மானியக் கோரிக்கையும் பிப்ரவரி 21-ந் தேதி முன் பண செலவுக்கான மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு சட்டசபை கூடும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது சபை சுமூகமாக நடைபெறுமா? இல்லை கடந்த ஆண்டைப் போல சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுக்குமா? என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
வெளிநடப்பு செய்த ஆளுநர் ரவி: கடந்த ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க மறுத்து தமிழகம் என கருத்து தெரிவித்த நிலையில் சட்டசபையில் உரையாற்றினார் ஆளுநர் ரவி. அதற்கு சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ரவி உரையாற்றும் போது எங்கள் நாடு தமிழ்நாடு என்கிற முழக்கங்கள் எழுப்பப்பட பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் ஆளுநர் ரவி தமது உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் ஆளுநர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும்; ஆளுநர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.
சட்டசபையில் நாளை என்ன நடக்கும்?: தற்போதும் தமிழ்நாடு அரசு தயாரித்திருக்கும் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவை இடம்பெறாமல் இருக்கப் போவது இல்லை. இந்த ஆண்டும் ஆளுநர் ரவி இதனை வாசிப்பாரா? அல்லது தவிர்ப்பாரா? என்பது நாளை தெரியவரும். ஒருவேளை தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் கடந்த ஆண்டை போல செயல்பட்டால் அவரது உரை இடம் பெறாது என மீண்டும் ஒரு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலிக் கொண்டு வருவாரா? அப்போது ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இணக்கமான போக்கு நீடிக்குமா?: தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தலின் பேரில் அண்மையில் தமிழ்நாடு அரசுடன் இணக்கமாக போக்கை வெளிப்படுத்தி வருகிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து சந்தித்து ஆலோசனைகளையும் நடத்தினார். ஆனாலும் தீவிரமான இந்துத்துவா கருத்துகளை பேசுவது; தேசப் பிதா காந்தியடிகளை கொச்சைப்படுத்தி பேசுவது என ஆளுநர் ரவியை சுற்றிய சர்ச்சைகள் தொடரவே செய்கின்றன. இதனால் தமிழ்நாடு சட்டசபையில் நாளை என்ன நடக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications