எடப்பாடி பழனிச்சாமி பேசும் போதே தடங்கல்... வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ததைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து வெளியேறினர்.
அரசின் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டுவந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வுசெய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 29 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது அதனை திமுக எதிர்த்தது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திமுக எப்போதுமே இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
நிலுவையில் உள்ள எல்லா மசோதாக்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்வீர்களா என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், மாநில சுயாட்சி கொள்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் சந்தேகமே வேண்டாம் என்று சொன்னார், தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்பதில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மீதமுள்ள மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, செய்யாறு விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசத் தொடங்கினார் அப்போது நேரரையில் தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கார சார விவாதங்கள் நடைபெற்றன. சட்டசபையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ததைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து சட்டசபையில் பேசிய துரைமுருகன் கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கூறினார். முன்னதாக தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications