அண்ணே! "அவர்" சட்டசபை வந்ததும் அப்படியே சுற்றி நின்று கொண்ட அதிமுக தலைகள்! என்னது நீல வேட்டியா? ஏன்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இன்று சட்டசபையில் பரபரப்பான சில காட்சிகள் அரங்கேறின.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இன்று முதல் நாள் ஆளுநர் ஆர். என் ரவி மட்டும் உரை நிகழ்த்துவார். அவரின் உரையை தொடர்ந்து முதல்நாள் கூட்டம் நிறைவு பெறும்.
இன்று 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். பொதுவாக ஆளுநர் உரைகளை, ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான்.

ஆளுநர் உரை
அதனால் இன்று ஆளுநர் உரையில் என்ன மாதிரியான தகவல்கள் இடம்பெற்று இருக்கும், என்ன மாதிரியான வார்த்தைகள் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இன்று சட்டசபையில் பரபரப்பான சில காட்சிகள் அரங்கேறின. அதன்படி சட்டசபை கூட்ட தொடருக்கு முதலில் அதிமுகவினர் வரிசையாக வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வந்தனர். அங்கு இருந்த செய்தியாளர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு, அதிமுக எம்எல்ஏக்கள் சென்றனர்.

அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுக எம்எல்ஏக்கள் பெரும்பாலும் தனி தனியாக பரபரப்பு இன்றிதான் வந்தனர். ஒவ்வொரு எம்எல்ஏவும் வரும் போது கூட்டம். முக்கியமாக ஓ பன்னீர்செல்வம் வைத்தியலிங்கத்துடன் கூட்டத்திற்கு வந்தார். இருவரும் ஒரே காரில்தான் வந்தனர். வைத்தியலிங்கம் பின்னால் வர ஓ பன்னீர்செல்வம்.. இல்லை இல்லை நீங்களும் முன்னால் வாருங்கள் என்று அழைத்தார். இருவரும் இதையடுத்து ஒன்றாக அடுத்தடுத்து நடந்து வந்தனர். இவரை வரவேற்க பெரிதாக அங்கு கூட்டம் இல்லை. பின்னால் ஒரு நான்கு பேர் வந்து இருப்பார்கள். மற்றபடி அவையில் பெரிதாக கூட்டம் இல்லை.

என்ன நடந்தது?
இதற்கு இடையில் ஆர்பி உதயகுமார் இன்று சட்டசபைக்கு வந்தார். அவர் வந்ததும் அதிமுக டாப் நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள் காமராஜ் போன்றவர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் அவரை ஏனோ சுற்றி நின்று கொண்டனர். அவரை சுற்றி நின்று கொண்டு அண்ணே வாங்கண்ணே.. வாங்கண்ணே என்று பெரிதாக வரவேற்பு கொடுத்தனர். மற்ற அதிமுக தலைவர்களுக்கு கிடைக்காத வரவேற்பு இன்று ஆர்பி உதயகுமாருக்கு கிடைத்தது. பொதுவாக ஆர்பி உதயகுமார் வைட் அண்ட் வைட்டில் வர கூடியவர். ஆனால் இன்று அவர் நீல வேட்டி அணிந்து இருந்தார்.

ஏன்
அதோடு அவர் காலில் செருப்பும் போடவில்லை. அவர் மலைக்கு மாலை போட்டு இருக்கிறார். விரைவில் சபரிமலை செல்ல இருக்கிறார். இதனால் அவர் நீல வேட்டி அணிந்து இருந்தார். அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அவரை பார்த்து மாலை போட்டது குறித்தும் விசாரித்தனர். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும்என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இன்னும் ஆர்பி உதயகுமார் முறையாக எதிர்க்கட்சி துணை தலைவராக பதவி ஏற்காத நிலையில்தான் இன்று அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications