தமிழக சட்டசபை ஜூன் 20இல் கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! முன்கூட்டியே தொடங்க என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அது முன்கூட்டியே ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் எனச் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கடைசியாகக் கடந்த பிப் மாதம் கூடியது. அப்போது தான் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்றன.

தொடர்ந்து அப்போது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், சட்டசபை கூடாமல் இருந்தது.
சபாநாயகர் அப்பாவு: இதற்கிடையே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டப்படுவதாக அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பொது விவாதம் முடிந்த போதிலும், மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதால் ஜூன் 24 ஆம் தேதி சட்டசபை கூட்டப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதம் எத்தனை நாள், எந்தெந்த தேதியில் எந்தெந்த துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என்பது குறித்தெல்லாம் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு சட்டசபை முன்கூட்டியே கூட்டப்படுவதாக அறிவித்துள்ளார்.
முன்கூட்டியே கூடுகிறது: இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி கூட்டப்படும் என அறிவித்து இருந்தேன். ஆனால், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் சட்டசபை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதலில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் இங்குத் தேர்தல் நடைபெற்றது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றிருந்தார். அவர் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்குப் பதவியேற்க உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், மானிய கோரிக்கை எத்தனை நாள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications