Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெங்கு காய்ச்சல்னு சொன்னாரே! சென்னை அக்கரையில் நடக்கும் பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஓய்வில் இருக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது அக்கரை ரிசார்டில் நடக்கும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

கர்நாடகாவில் 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் 2020 ஆம் ஆண்டு இணைந்தார். இதையடுத்து 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

annamalai dengue chennai

இந்த நிலையில் அவர் கட்சியில் இணைந்த கொஞ்ச காலத்திலேயே, சீனியர்கள் இருக்க, 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது. அது போல் 2024 ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

4 எம்எல்ஏக்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக, தமிழகத்தில் 4 சட்டசபை உறுப்பினர்களை பெற்றது. அது போல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடர பாஜக தலைமை முடிவு செய்த போது அண்ணாமலையோ, முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி முறிவு

இதனால் பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. அவ்வப்போது அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை கருத்து தெரிவிப்பதும், அதற்கு அதிமுக நிர்வாகிகள் எதிர்வினையாற்றுவதும் என தொடர்கதையாக இருந்தது. தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க அதிமுக தலைமை கேட்டுக் கொண்டதாக கூட செய்திகள் வந்தன.

அமித்ஷா

இந்த நிலையில் அண்ணாமலை மீது மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு நல்ல அபிப்ராயம் இருந்தாலும் அவரது பதவிக்காலம் முடிவடைந்ததால் கடந்த 2025 ஆம் ஆண்டு நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக தேர்வு செய்தனர்.

லைம் லைட்டில் அண்ணாமலை

எனினும் அண்ணாமலை லைம்லைட்டில் இருந்து வந்தார். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த போது கூட, முன்னாள் தலைவராக இருந்தாலும், அமித்ஷாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார். தமிழகத்தில் என்டிஏ தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா சொன்ன போதெல்லாம் அதற்கு சில விளக்கங்களையும் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு நயினார் நாகேந்திரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிட்ட போது கூட செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனை, எதுவும் பேச விடாமல் அண்ணாமலை அழைத்துச் சென்றார்.

தமிழக பாஜக

அண்மையில் தமிழக பாஜகவில் பலருக்கு பதவிகள் கொடுக்கப்பட்டபோதும்கூட அண்ணாமலைக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. அமித்ஷாவுடனான ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறார் என சொல்லப்பட்டது. மேலும் பால் பண்ணை வைக்க முயற்சிப்பதாக அண்ணாமலையே குறிப்பிட்ட போது கூட அவர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் அந்த அறிக்கையில் பாஜக என்பதை குறிப்பிடாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்றே குறிப்பிட்டிருந்தார்.

பாஜக கூட்டம்

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையை அடுத்த அக்கரையில் (செங்கல்பட்டு மாவட்டம்) பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடக்கும் பாஜக மையக் குழுக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க மாட்டார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாலும் அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னதாலும் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை தற்போது அந்த கூட்டத்திற்கு வந்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+