காலையில் பாஜவுக்கு காத்திருந்த ஷாக்..சட்டமன்றத்தில் கால் வைத்த முதல் MLA மரணம்..யார் இந்த வேலாயுதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினருமான வேலாயுதம் காலமான நிலையில் பாஜகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது யார் என்றே தெரியாத வேலாயுதம் ஒரு காலத்தில் பாஜகவின் சக்தி மிகுந்த தலைவராக வலம் வந்திருக்கிறார்.

பாரதிய ஜன சங்கத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் மூத்த தலைவர் அத்வானியும் இணைந்து 1980ஆம் ஆண்டு பாஜகவாக மாற்றினர். அப்போது திமுக ஆரம்பித்து 31 ஆண்டுகளும் அதிமுக ஆரம்பித்து எட்டு ஆண்டுகளும் கடந்திருந்தது.

Tamil Nadu BJP first MLA C Velayutham passed away

தேசிய கட்சியாக பாஜக இருந்தாலும் தமிழகத்தில் அந்த கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. தமிழகத்தில் தங்களால் தனித்து போட்டியிட முடியாது என நினைத்த பாஜக மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.

2001ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து முதன்முதலாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது பாஜக. திமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலில் மயிலாடுதுறையில் ஜெகவீரபாண்டியன், காரைக்குடியிலிருந்து எச்.ராஜா, மயிலாப்பூரில் லட்சுமணன், தளி தொகுதியில் முரளிதரன் ஆகியோர் பாஜக மக்கள் பிரதிநிதிகளாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.

அதற்குப் பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை இழந்ததோடு ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட பெறவில்லை. அதற்கு பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநில கட்சியான அதிமுகவுடன் மீண்டும் இணைந்து தேர்தலை பாஜக சந்தித்தது. அதற்கு பலனாக நான்கு எம்எல்ஏ.க்களும் கிடைத்தனர். ஆனால் மேற்கண்ட பட்டியலில் இருந்த அனைவருமே அதாவது எச். ராஜா உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக பாஜக உறுப்பினர்களாக சட்டமன்றம் சென்றவர்கள்.

ஆனால் தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேலாயுதம். தேசிய கட்சியாக பாஜக தேசிய மிகப்பெரிய அளவில் வளர்ந்தாலும் தமிழகத்தில் காலூன்றாத நிலையில் அந்த கட்சிக்கு என அரசு முத்திரை பதித்த லெட்டர்பேட்டை பெற்று தந்தவர் வேலாயுதம். 1996 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அதுதான் தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த நிகழ்வாக அமைந்தது.

இதனையடுத்து தேசிய அளவில் பேசு பொருளானார் வேலாயுதம். தேசிய தலைவர்களின் கவனமும் அவர் மீது திரும்பியது. தொடர்ந்து அரசியலில் பிஸியாக இருந்த அவர் காலப்போக்கில் அரசியலில் இருந்து விலகினார். கடந்த உங்களது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார் இதன் இடத்தில் தமிழக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேலாயுதம் மறைவு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+