அந்தர் பல்டி.. கம்ப்ளீட் சரண்டர்- மோடிக்கு எதிராக திமுகவை ஆதரிப்பேன்- சீமான் பேச்சுக்கு பாஜக பதிலடி!
சென்னை: லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக வலிமையான வேட்பாளரை நிறுத்தினால் திமுகவை ஆதரிபேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வரும் சீமான், IF suppose, ஒருவேளை என் தாய்நிலத்துக்குள் குறிப்பாக என் மாவட்டத்துக்குள்ள ராமேஸ்வரத்துக்குள்ள மோடி அய்யா நின்றால் நான் அவரை எதிர்த்து நிற்பேன். தம்பி படத்துல உரையாடல் வரும்ல.. நீ எந்த பக்கம் நின்னாலும் அந்த பக்கம் நிற்பேன்... அது மாதிரி நீ என் நிலத்தில் எங்க வந்து நின்றாலும் நான் நிற்பேன். இவனுக மாதிரி கூழை கும்பிடு போட்டு பேச்சுக்கு பேசுறது இல்லை. உண்மையிலேயே சண்டைக்காரன் மகன் சண்டைக்காரன். நான் நிற்பேன். ஒருவேளை திமுக தன் உதயசூரியன் சின்னத்திலேயே மோடியை வீழ்த்துவதற்கு ஒரு வேளை வலுவான வேட்பாளரைப் போட்டால் நான் போட்ட வேட்பாளரை திரும்பப் பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால் திமுக கூட்டணிக்கு கொடுத்துவிட்டால் நான் நேரடியாக மோடியுடன் சண்டை போடுவேன்.. நிற்பேன். அப்ப வந்து, ஓட்டை பிரிக்கிறார் சீமான்.. கூரையை பிரிக்கிறார்னு பேசுனா பிச்சுபுடுவேன்.. பிச்சு.. அதான் நீ நில்லு நான் விலகுகிறேன் என்கிறேனே என கூறியிருந்தார்.

இது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: சீமானின் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன வார்த்தை சொல்லலாம் எனில் 'அந்தர் பல்டி' 'கம்ப்ளீட் சரண்டர்'... அப்படின்னு வார்த்தைகளை உபயோகிக்கலாம். ஏனென்றால் ஆண்ட கட்சி, ஆளுகிற கட்சி இரண்டையும் எதிர்த்துதான் சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார். தன்னை ஒரு 3-வது சக்தி என மார்தட்டிக் கொள்கிறார் சீமான். அவருடைய வாக்கு வங்கி என்பதே திமுக, அதிமுக இல்லாதவர்கள்தான். திடீரென சீமான் அந்தர் பல்டி அடிக்க காரணம், எப்படியாவது தன்னை பல்டி அடிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் காப்பாற்றிக் கொள்ள திமுகவிடம் சரணடைந்துவிட்டார் சீமான். அரசியலில் நிலையான கொள்கை கொண்டவராக நினைத்த சீமான், இப்படி பல்டி அடிக்கிற காரணத்தை தமிழ்நாடு மக்கள் என்ன என்பதை உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
சீமான், திமுகவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? என்ன அழுத்தம் அவருக்கு? மிக பலவீனமான நிலையில் இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை காப்பாற்ற நினைக்கிறார். மோடியை காரணம் காட்டி திமுகவிடம் சரணடைந்துள்ளார் சீமான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications