'உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக ரைட்ஸ் திட்டம்..' மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர்
சென்னை: பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி உலகின் பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் உலக வங்கியின் உதவியுடன் ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணியளவில் பட்ஜெட் உரை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் பிடிஆர், சுமார் மூன்று மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார்

கருணாநிதி
அமைச்சர் பிடிஆரின் பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பற்றிய அறிவிப்பு குறித்துப் பேசிய அமைச்சர் பிடிஆர், "சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துறையை முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவினார்.

இலவச பேருந்து பயணம்
அதேபோல மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள தற்போதைய தமிழ்நாடு முதல்வரும் மாற்றுத்திறனாளிகள் நலனைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் ஒரு உதவியாளருடன் அனைத்து வகையான அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் ஏற்படுத்தப்படும்

உதவித் தொகை
தற்போது காத்திருப்பிலுள்ள 9176 நபர்களுக்கு மாதம் 1500 ரூபாய் பராமரிப்பு தொகையை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அவர்கள் விரும்பும் உபகரணங்களை வாங்க உதவும் வகையில் 50.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ரைட்ஸ் திட்டம்
உலக வங்கியின் உதவியுடன் ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகளைத் தொடக்க நிலையில் கண்டறிதல், பராமரிப்பு, கல்விச் சேவைகளை உடனடியாக அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு, மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டத்தைப் பரவலாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளே முன்னுதாரணமாக இருக்கும். ஆறு ஆண்டுகளில் சுமார் ரூ 1072 மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
Recommended Video

திருநங்கைகள்
அதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு உதவும் வகையில் மாநிலத்தில் இருக்கும் கைவிடப்பட்ட 3ஆம் பாலினத்தவருக்கு ஓய்வூதியம் வழங்க 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications