சென்னையில் காற்று மாசுக்கு குட்பை! மின்சார பேருந்து சேவை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களால் காற்று மாசு அதிகரித்து வருவதாக சூழலியலாளர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் 950 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை மாநகராட்சிகளிலும் மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பேசுகையில், "தமிழ்நாட்டில் கடைகோடி குக்கிராமங்களுக்கும் தேவையான தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் நிதியாண்டில் ஏற்கனவே அறிவித்துள்ளபடி 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட 1,031 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டிற்கு உகந்த 250 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் காணப்படும் காற்று மாசுபாட்டினை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்துக்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூர் மாநகரத்துக்கு 75 மின் பேருந்துகள், மதுரை மாநகருக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
பெருகிவரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து, புறநகர் ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்துக் கொண்ட பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் முனையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் இவற்றை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணிகளுக்கு தேவையான அனைத்து நவீன வசதியுடன் ஏற்படுத்தப்படும். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இதேபோன்று பன்முக போக்குவரத்து முனையம் ஒன்று நவீன வசதியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கடந்த 1997ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அறிமுகப்படுத்திய சிற்றுந்து (மினி பஸ்) திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகர்ப்புறங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் மினி பஸ் சேவையை வழங்கிடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சுமார் 2000 வழித்தடங்களில் மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத்திறன் சேவை, வளங்கள் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு செயல்பாட்டின் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவதற்காக 2000 கோடி ரூபாய் தொகையுடன் ஊக்க நிதியம் வரும் நிதி ஆண்டில் உருவாக்கப்படும். மேலும் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சேவையினை மேம்படுத்தும் வகையில் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் செயல் திறன் இடைவெளி ரீதியாக 646 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த வரவு செலவு திட்டத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான 3600 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்து கட்டணம் மானியத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்து துறைக்கு 12, 964 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications