அவரா? மூத்த அமைச்சருக்கு போன முக்கியமான துறை.. ஸ்டாலினின் ஆக்சனுக்கு பின் இருக்கும் பிளான் 2024!
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவிற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 19 மாதங்கள் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது.
உதயநிதி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கூடுதலாக இலாக்காக்கள் கொடுக்கப்பட உள்ளன.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
அந்த வகையில் கடந்த சில காலமாக அமைதியாக இருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒரு பொறுப்பு வழங்கப்பட உள்ளது . ஜாதி ரீதியிலான புகாரில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருந்தவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டது இதையடுத்து ராஜகண்ணப்பன்அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

விமர்சனம்
பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் ராஜகனப்பன் தரப்போ.. அந்த ராஜேந்திரன் அதிமுக விற்கு நெருக்கமானவர். வேண்டும் என்றே எனக்கு எதிராக சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள் என்று கூறினார். நான் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தவறான பிம்பம் கட்டமைப்படுகிறது. நான் அமைதியாக இருந்தால் கூட என்னை வைத்து சர்ச்சையை உருவாக்குகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர் பதவி
பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மட்டும் இருந்த ராஜகணப்பன் கடந்த சில நாட்களாக மிகவும் அமைதியாக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்தும் இவருக்கு ஒரு துறை மட்டும், அதிலும் பெரிதும் அதிகாரம் இல்லாத துறை மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கொஞ்சம் ஹை பெட்ஜெட் துறை ஆகும். ராணிப்பேட்டை காந்தி அமைச்சரிடம் இருந்து அந்த துறை வாங்கப்பட்டு இவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

2024 தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தென் மண்டலத்தில் இவரின் சமூகத்திற்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. தென் மண்டலத்தில் லோக்சபா தேர்தலின் போது இவரின் சமூகம் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக விளங்க போகிறது. இந்த நிலையில்தான் ஓரம்கட்டப்பட்டு இருந்த ராஜகண்ணப்பன் மீண்டும் லைம் லைட்டிற்கு திரும்பி இருக்கிறார். 2024 தேர்தல் நெருங்கும் நிலையில், ராஜகண்ணப்பன் இனி உற்சாகமான பணிகளை செய்ய வசதியாக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications