சென்னையில் வரும் 6 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?
சென்னை: வரும் ஜனவரி 6 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.சட்டமன்ற கூட்டத்தொடர், இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதலீடு செய்ய நிறைய நிறுவனங்கள் ஒப்புதல் கோரி வரும் நிலையில் இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோன்று வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதாலும், தேர்தலில் திமுக கவர்ச்சிகர வாக்குறுதிகள் அளிக்கும் பட்சத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக அரசு சார்பில் கொடுக்கப்படும் உரைகளை வாசிப்பதை தவிர்த்து வருகிறார். எனவே ஆளுநர் உரை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
