தமிழகத்தில் அதிரடியாக அமைச்சர்கள் இலாகா மாற்றம் - யார் யாருக்கு என்னென்ன துறை? முழு விவரம்
சென்னை: இன்று புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களின் 4 துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி பதவியேற்றது. கடந்த மே 7ம் தேதியுடன் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. மூன்றாவது ஆண்டில் ஸ்டாலின் அரசு அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஆண்டு போக்குவரத்து துறையில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக அமைச்சரவையில் சில மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது. அத்துடன் அமைச்சரவையில் புதிதாக உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டது.
சேகர்பாபு சிஎம்டிஏ துறை: அத்துடன் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டது. வீட்டுவசதி துறையில் இருந்த சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு (சென்னை பெருநகர வளர்ச்சி துறை) அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் அளிக்கப்பட்டது.
இந்லையில் 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் அமைச்சரவையில் சிலமாற்றம் மீண்டும் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமைச்சரவையில் சரியாக செயல்படாதவர்களை மாற்றிவிட்டு புதிதாக ஒருவரை அமைச்சரவைக்கு கொண்டுவரவும். இப்போது உள்ள அமைச்சரவையில் துறைகளை மாற்றித்தரவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக பால்வளத்துறையில் எழுந்த சிக்கல் காரணமாக அமைச்சர் சா.மு.நாசர் மாற்றப்படுவார் என்றும் உதயநிதி, சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ காரணமாக பிடிஆரும் துறை ரீதியாக மாற்றப்படுவார் என்று தகவல்கள் பரவின. இதன்படி,
இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில இன்று தமிழகத்தின் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் பொறுப்பு தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மனோ தங்கராஜ் தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சசராக இருந்து வந்தார் இப்போது பிடிஆர் வசம் அந்த துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் கூடுதலாக தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications