வரலாற்றில் இது முதல்முறை.. புதிய சாதனை படைத்த ஸ்டாலின்.. தமிழக அமைச்சரவையில் திமுக அரசு செம
சென்னை: தமிழக அமைச்சரவையை மாற்றியமைத்ததன் மூலம் சில மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இம்முறையும் கிடைக்காமல் போய்விட்டதாக கருதுகிறார்கள்.. எனினும், புதிய அமைச்சரவையை மாற்றி அமைத்து, புதிய சாதனையை திமுக அரசு படைத்திருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. வழக்கு விவகாரத்தில் சிக்கி சிறை சென்றதால் தனது பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜிக்கும், பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது சர்ச்சைகள் எழுந்ததால் நீக்கப்பட்ட நாசருக்கும் மீண்டும் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் அமைச்சர்களாகியிருக்கிறார்கள்.. திமுகவுக்கு கொங்குவின் பலமாக திகழும் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.. கோவி செழியன் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. ஆர் ராஜேந்திரன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்தவர்
சாதனை: இந்த அமைச்சரவை மாற்றத்தில், சில குறிப்பிடத்தக்க சாதனைகளை திமுக அரசு புரிந்துள்ளது.. முதலாவதாக, கோவி செழியனுக்கு உயர்கல்வி நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.. கோவி செழியன், உதயநிதியின் சாய்ஸ் என்கிறார்கள்.. காரணம், இவர் கட்சிக்கு மிகவும் விசுவாசமானவர்.. உழைக்ககூடியவர்..
அதுமட்டுமல்லாமல், உயர்கல்வியில் ஆளுநரின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தலித் பிரிவை சேர்ந்த ஒருவரை அமைச்சராக நியமிக்கும்போது பெரியளவில் எதிர்ப்பு வராது என்பதால்தான், கோவி செழியனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.. அந்தவகையில், உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்..
அமைச்சரவை: இரண்டாவதாக, அமைச்சரவையில் கோவி.செழியன், ராஜேந்திரன் சேர்க்கப்பட்டது மூலம், முதல்முறையாக தஞ்சை, சேலம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது... செந்தில் பாலாஜி, நாசர் மறுபடியும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டது மூலம் கரூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மீண்டும் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
அதிருப்தி: எனினும், கோவை, நெல்லை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, விழுப்புரம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலைமை உள்ளது, சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களின் கவனத்தையும், ஆதங்கத்தையும் பெற்றுள்ளது.
மூன்றாவதாக, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு ஆதிதிராவிட நலத்துறையும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறையும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசனும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவராவார்..
வரலாறு சாதனை: அந்தவகையில், தமிழகத்தின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 4 பட்டியலின அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications