ரமலான் நோன்பு தேதி அறிவிப்பு.. தமிழக தலைமை காஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று பிறை தெரியவில்லை. இதனால் ரமலான் நோன்பு வரும் மார்ச் 2 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. அதேபோல் புனித மாதமாக ரமலான் உள்ளது. உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள்

ரமலான் நோன்பை கடைப்பிடித்து ரம் ஈடுபட்டு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை என்பது பிறையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதனால் ரம்ஜான் பண்டிகை என்பது ஒவ்வொரு இடங்களிலும் ஒருநாள் வரை மாறுபடும்.
இஸ்லாமியர்கள் தங்களின் நோன்பு காலத்தில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு உண்ணாமல் நோன்பை கடைப்பிடிப்பார்கள். அதன்பிறகு மாலையில் இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள். இந்நிலையில் தான் ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு காலம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது இஸ்லாமியர்களின் காலண்டரின் 8 வது மாதமாக ஷபான் உள்ளது. இந்த மாதம் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 28ம் தேதி (அதாவது இன்று) ஷபான் மாதத்தின் 29வது நாளாகும். அதன்படி ரம்ஜான் நோன்பு காலம் நெருங்கியது. பிறை அடிப்படையில் நோன்பு காலம் தொடங்கும்.
இந்நிலையில் தான் இன்று பிறை என்பது பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் பிறை என்பது தெரியவில்லை.
பிறை தெரியாத நிலையில் ரம்ஜான் நோன்பு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 - 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்'' என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications