சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையை புறக்கணிக்கிறீர்களா?.. கேள்வி எழுப்பிய நயினார்..சுடச்சுட நச் பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கோவை குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சுடச்சுட பதிலடி கொடுத்தார்.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 23-06-2021

    தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலாவது சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

    அதுவும் இன்றைய தினம் சட்டசபையில் சூடான விவாதங்கள் இருந்தன. இதில் குறிப்பிடும்படியாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையிலான விவாதத்தில் அனல் பறந்தது.

    பரபர விவாதம்

    பரபர விவாதம்

    பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசினார். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது ஏன்? என்று கேட்டார். இதற்கு மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் அளித்தார். ''அரசியல் சட்டத்தில் உள்ளபடிதான் ஒன்றிய அரசு என்று அழைக்கப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை. இனிமேலும் அப்படித்தான் அழைப்போம்' என்று சுடச்சுட பதில் அளித்தார் முதல்வர்.

    கோவையில் இல்லை

    கோவையில் இல்லை

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக விவாதம் எழுந்தபோது தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக பிரதமரிடம் பாஜக பேச தயாரா? என்று நயினார் நாகேந்திரனிடம் பதில் கேள்வி கேட்டார் முதல்வர். இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கோவையில் இன்னும் தொடங்கவில்லை.

    தவறான கருத்து

    தவறான கருத்து

    கோவையை புறக்கணிக்கிறீர்களா? என்று நயினார் நாகேந்திரன் முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''அவையில் தவறான கருத்துக்களை கூற வேண்டாம். கோவையை எந்த காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எம்ய்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வாக்களித்தவர்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை? என்று வருத்தப்படும் வகையிலும் பாரபட்சம் பாராமல் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

    திமுக உறுப்பினர்கள் ஆராவாரம்

    திமுக உறுப்பினர்கள் ஆராவாரம்

    மக்கள் ஏன் எங்களை புறக்கணித்தார்கள்? என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறோம். அனைவருக்குமான அரசாக திமுக அரசாங்கம் திகழ்ந்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    English summary
    Tamil nadu Chief Minister Stalin fired back at a question raised by BJP legislator nainar nagendran about Coimbatore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X