Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கு அடித்த ஜாக்பாட்..கோவை, சென்னையின் கலரே மாற போகுது! சிகாகோவில் மு.க.ஸ்டாலின் சிக்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சிகாகோவில் அஸ்யூரண்ட், ஈட்டன், ட்ரில்லியன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 3050 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

mk stalin us visit mk stalin chennai

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27.8.2024 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ நகரிற்கு 28.8.2024 அன்று சென்றடைந்தார். முன்னதாக சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பே பால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனங்கள் சூலூர், மதுரை, செங்கல்பட்டில் சுமார் 900 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்கின்றன.

மேலும், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகின. தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிறுவன தலைவர்கள், சிஇஓக்களை சந்தித்து பேசி முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் சிகாகோவில் மட்டும் அஸ்யூரண்ட், ஈட்டன், ட்ரில்லியன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 3050 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அஸ்யூரண்ட் நிறுவனம் சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைப்பதாகவும், ஈட்டன் நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்தில் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது,

இதே போல ட்ரில்லியன்ட் நிறுவனம் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டையும், லிங்கன் எலக்ட்ரிக் சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்தில் மேற்கொள்கிறது. இதேபோல விஸ்டியன் நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டையும், விஜய் பிரஷிசன் நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டையும், நைக்கி நிறுவனம் உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஆலோசனை மேற்கொண்டதோடு, ஆப்டம் நிறுவனம் புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+