கேள்வி எழுப்பிய சீமான்.. 50,643 மனுக்களுக்கு தீர்வு.. லிஸ்ட் போட்டு.. பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். எந்தவொரு தொகுதிக்கு பிரசாரம் செய்ய சென்றாலும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் திட்டத்தின்படி அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

குறைகளை நேரடியாக சொல்லும் மக்களிடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்திருந்தார். மேலும் கூட்டத்தில் குறைதீர் பெட்டிகளை வைத்து இருந்தார். அதில் போடும் மனுக்கள் மீது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்து விட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தி.மு.க வெற்றிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் குறைதீர் திட்டமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக தான் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் வகையில் பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கு அச்சாரமிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தனிப்பிரிவு

தனிப்பிரிவு

மக்களிடம் பெற்ற மனுக்களுக்கு தீர்வு கண்டு, குறைகளை தீர்ப்பதற்காகவே ' உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' என்னும் திட்டத்தை பதவியேற்ற முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கினார். இதற்கு தனிப்பிரிவையும் ஏற்படுத்தி, இந்த துறையை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரனும் நியமிக்கப்பட்டார்.

சீமான் கேள்வி

சீமான் கேள்வி

இந்த பிரிவுக்கு என்று தனி இணையதளமும் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 'உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' துறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த துறை மீது நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சனத்தை முன் வைத்தார். மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என சீமான் கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாடு அரசு விளக்கம்

இந்த நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' துறையின்கீழ் 1,21,720 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 50,643 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துரித நடவடிக்கை

துரித நடவடிக்கை

'முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களிலிருந்து சில பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சரால் கடந்த 18-5-2021 அன்று 549 நபர்களுக்கும், 3-6-2021 அன்று 3,213 நபர்களுக்கு மற்றும் 11-6-2021 அன்று 1,100 நபர்களுக்கும் நலத் திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

 50,643 மனுக்களுக்கு தீர்வு

50,643 மனுக்களுக்கு தீர்வு

இதுவரை 1,21,720 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், 50,643 மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஏற்கப்பட்டுள்ள 50,643 கோரிக்கைகளில், வருவாய்த் துறையின் கீழ் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், இதர நலத் திட்ட உதவிகள் 18,744 ஆகும்.

 மின்பகிர்மானக் கழகம்

மின்பகிர்மானக் கழகம்

மேலும், ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் 7,311 நபர்களுக்கு வீடு கட்ட வழங்கப்பட்ட உதவித் தொகைகளும்,அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான சுமார்300 கோடி ரூபாய் மதிப்பிலான 5,250 பணியாணைகளும் இவற்றில் அடங்கும். நகரப் பகுதிகளில் அடிப்படை வசதி கோரி பெறப்பட்ட 1,767 மனுக்கள் பல்வேறு நகராட்சிகள்மூலம் ஏற்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை மற்றும் கூட்டுறவு உணவுப் பொருள் துறை சம்பந்தப்பட்ட 2,504 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) தொடர்பான 1,334 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

சமூக நலத் துறை தொடர்பான மனு

சமூக நலத் துறை தொடர்பான மனு

சமூக நலத் துறை தொடர்பான 933 மனுக்களுக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதுதவிர, மற்ற துறைகள் சார்ந்த 12,800 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மனுக்களில், 36,072 மனுக்கள் மனுதாரரின் முகவரி இல்லாமலும், மனுதாரரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாமலும், கோரிக்கைகளில் தெளிவு இல்லாமலும் உள்ளதால், இவற்றை தற்போது நிறைவேற்றிட இயலாத நிலை உள்ளது. எனினும், அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், 35,005 மனுக்கள் தற்போதுள்ள அரசு விதிகளின்கீழ் நிறைவேற்றிட இயலாத நிலை இருப்பதால், அவர்களுக்கான மாற்றுத் தீர்வுகள் அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 வேலைவாய்ப்பு மனுக்களுக்கு தீர்வு

வேலைவாய்ப்பு மனுக்களுக்கு தீர்வு

இதுதவிர, வேலைவாய்ப்பு கோரி பெறப்பட்ட 66,264 மனுக்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் 47,611 மனுதாரர்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில், மனுதாரர்களின் விருப்பத்திற்கேற்ப வேலைவாய்ப்பு உதவித் தொகை கோரிய 271 நபர்களுக்கு உதவித் தொகை வழங்கவும், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு கோரும் 5,082 மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையம் (District Employment and Career Guidance Centre) மூலம் போட்டித் தேர்வுகளுக்கான இணையதள வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் ஆணை வழங்கினார்

முதல்வர் ஆணை வழங்கினார்

தனியார் வேலைவாய்ப்பு கோரி பெறப்பட்ட மனுக்களில் 2,545 மனுக்களில், மனுதாரர்களின் விவரங்கள் www.tnprivatejobs.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இணையதள வேலைவாய்ப்பு முகாம் (Online Job Mela) கடந்த 21-6-2021 அன்று நடத்தப்பட்டது. இதில் 184 நபர்களுக்கு உடனடியாக தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, முழுமையாக தீர்வு காணப்பட்ட 50,643 மனுதாரர்களில் 11 மனுதாரர்களை, மாண்புமிகு முதலமைச்சர் நேரில் அழைத்து இன்று (29-6-2021) உரிய ஆணைகளை வழங்கினார். இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பதிலடி

பதிலடி

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின்கீழ் மனுக்களுக்கு தீர்வு கண்டதை முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த விளக்கம் சீமான் உள்ளிட்ட பலரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+