Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லா படிக்கணும்..ஆவடி டான்யா வீட்டிற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்

முக தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய சிறுமி டான்யாவிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆவடியில் புதுமைப்பெண்கள் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், 2ஆம் கட்ட அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள சிறுமி டான்யாவின் இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா, அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து, சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு டான்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Tamil Nadu Chief Minister MK Stalin Visits to Tanyas House

கடந்த 29ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.சிகிச்சை முடிந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டான்யாவை வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் , முக சிதைவுக்கு சிகிச்சைளிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமி குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி டான்யாவை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tamil Nadu Chief Minister MK Stalin Visits to Tanyas House

புதிதாக பிறந்தது போல மறுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டான்யா. செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டான்யா, இனி என்னை யாரும் ஒதுக்கமாட்டார்கள். ஜாலியாக பள்ளிக்கு செல்வேன். அறுவை சிகிச்சையின் மூலம் தன் கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய டான்யா சிகிச்சை அளிக்க உதவிய முதலமைச்சருக்கு நன்றி எனவும் தெரிவித்தார். நான் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து முதலமைச்சரின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் கூறினார்.

இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 8 மணி நேரம் நடக்கும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்தனர்.

Tamil Nadu Chief Minister MK Stalin Visits to Tanyas House

அதன்பிறகு சிகிச்சை முடிந்து தனது வீடு திரும்பியுள்ள சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இப்போது எப்படி இருக்கிறது? நன்றாக படிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆவடியில் உள்ள கல்லூரியில் இன்று புதுமைப்பெண்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அருகில் இருந்த சிறுமி டான்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றார். முதல்வர் ஸ்டாலினை எதிர்பார்க்காத டான்யாவின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+