கேள்வி எழுப்பிய அண்ணாமலை! முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து டெல்லிக்கு பறந்த கடிதம்! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாலை கூறிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின் தடையால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரம் தடைபட்டதால் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தூத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மேலும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

இந்நிலையில் செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும். என குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நானொன்றுக்கு 72,000 மெட்ரிக் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அக்கடிதத்தில், ஓடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களில் இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானதென்றும், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில். தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே உள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தமிழக முதல்வரின் இந்த கோரிக்கையானது மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி உரிய உத்தரவைப் பிறப்பித்தால் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி உடனடியாக வந்து சேரும். இதனால் தமிழகத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கப்பட்டு மின்தடையை வெகுவாக குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+