இன்னும் இரண்டு நாளில் ”நல்ல செய்தி”..முதல்வர் வைத்த ட்விஸ்ட்.. ஒரு வேலை இந்த அறிவிப்பாக இருக்குமோ?
சென்னை : சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களுக்கான நல்ல திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அறிவிக்க முடியவில்லை இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடுவேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான "பபாசி" சார்பில் வருடம் தோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நாற்பத்தி ஐந்தாவது புத்தக கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முதல்வர் விருது
மேலும் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உரைநடை நாடகம் கவிதை புதினம் பிற மொழி ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் பொற்கிழி விருதுகளை முதல்வர் வழங்கியதோடு, பபாசி விருதுகளான பதிப்பக செம்மல் கணபதி விருது சிறந்த பதிப்பாளர் விருது சிறந்த புத்தக விற்பனையாளர் விருது குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் வழங்கினார்.

மக்களுக்கு நல்ல செய்தி
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது சுயசரிதை புத்தகமான உங்களில் ஒருவன் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படும் எனவும், இந்த நல்ல நேரத்தில் நல்ல திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என தான் விரும்பியதாகவும் ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அறிவிக்க முடியவில்லை எனக் கூறினார். மேலும் இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடவே என்றும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

என்ன திட்டமாக இருக்கும்?
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதல்வர் தெரிவித்த அந்த நல்ல திட்டம் என்னவாக இருக்கும் என பலர் தற்போது இருந்தே பல காரணங்களை கூறி வருகின்றனர். ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டமா அல்லது ஏதேனும் புதிய திட்டத்தினை முதல்வர் அறிவிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதிச் சுமை காரணமாக அந்தத் திட்டம் தற்போது துவங்கப்படாத நிலையில் இது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஒருவேளை குடும்பத் தலைவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா அல்லது வேறு ஏதும் திட்டம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications