தந்தை பெரியார், பரியேறும் பெருமாள் குறித்து கேள்வி- கட்டுப்பாடுகளுடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது.
Recommended Video
தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இன்று குரூப் 1 தேர்வு
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று குரூப்- 1 (தமிழக குடிமைப் பணி தேர்வுகள் குரூப் 1) தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது. துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் என 66 காலி பணியிடங்களுக்கு 2.67 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 856 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

கொரோனா சோதனைகள்
இன்று காலை முதலே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பரியேறும் பெருமாள் குறித்து கேள்வி
இன்றைய தேர்வில் 2018-ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்தும் ஒரு கேள்வி இடம்பெற்றது. தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற தலைப்பில், இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது; இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது; இப்படம் திரு மாரி செல்வராஜால் தயாரிக்கப்பட்டு நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது என்ற ஆப்சன்களுடன் கேள்வி இடம்பெற்றிருந்தது.

தந்தை பெரியார் தொடர்பாக 10 கேள்விகள்
மேலும் தந்தை பெரியார் தொடர்பாக இன்றைய தேர்வில் 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 1929-ம் ஆண்டு முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டுக்கு யார் தலைமை என்பது உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications