ப்ளஸ் 2 தேர்வில் திருப்பூர் நம்பர் 1 ஈரோடு, கோவை மாணவர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்

ப்ளஸ் 2 தேர்வில் திருப்பூர் நம்பர் 1 ஈரோடு, கோவை மாணவர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 97.12 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் திருப்பூர், ஈரோடு மாவட்ட மாணவர்கள் முதல் இரண்டு இடங்களைச் தட்டிச்சென்று உள்ளனர்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை ஏழாம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அடுத்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. லாக்டவுன் காரணமாக தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வை நடத்திவிட்டு அதன் பிறகு முடிவை அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்ட நிலையில் திடீரென இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Tamil Nadu Class 12 results declared Tirupur, Erode and Coimbatore first 3 places

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், மார்ச் 2020 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச்/ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத் தேர்வில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இணையதளத்தில் இன்று வெளியிடப்படும். மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்" என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு அறிவித்தபடி முடிவுகள் வெளியாகி உள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். 94.80 சதவிகித மாணவிகளும், 89.41 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளனர் மாணவர்களை விட மாணவிகள் 5.3 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.

ப்ளஸ் 2 தேர்வில் 97.12 சதவிகிதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.99 சதவிகிதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 96.39 சதவிகிதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் முதல், இரண்டாம் இடங்களைப்பிடித்தனர் அதே இடத்தை இந்த ஆண்டும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தட்டிச்சென்றுள்ளனர். ஆண்டுதோறும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எப்போதுமே முதலிடம் பிடித்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களைச் தட்டிச்சென்று உள்ளனர்.

மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+