சென்னையில் சுதந்திர தின நினைவுத்தூண்.. ஸ்டாலின் திறந்து வைத்தார்.. சிறப்புகள் என்னென்ன?
சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர தின நினைவுத்தூணை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நினைவு தூண் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
Recommended Video
நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுக்கிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இதேபோல் சென்னை கோட்டையில் முதன்முதலாக தேசியக்கொடி ஏற்றினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்பின்னர் தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

மக்களுக்கு நன்றி
''75-வது சுதந்திர தூண் கல்லாலும், மண்ணாலும் உருவானதல்ல. பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும், சதையாலும் உருவானதாகும். இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டை நாம் மாற்றியுள்ளோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். கொரோனா நோய் தொற்றை நாம் வலுவாக போராடி வெற்றி பெற்றுள்ளோம். முதன் முதலாக தேசியக்கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சாதனை புரிந்தவர்களுக்கு விருது
இதனை தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணனுக்கு அப்துல் கலாம் விருது என்பவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சுதந்திர தின நினைவுத்தூண்
59 அடி உயரத்தில் உள்ள சுதந்திர தின நினைவுத்தூண் 1.98 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்பாகம் மட்டும் கான்கிரீட் தளமாக உள்ளது. அதற்கு மேல் துருப்பிடிக்காத உலோகத்தால் நினைவுத்தூண் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சியில் அசோக சின்னம், அசோக சக்கரம், நான்கு புறமும் ராணுவ வீரர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

10 நாட்களில் கட்டப்பட்டது
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூண் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவில் முதல்வர் மு.கஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தி.மு.க அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications