ஸ்டாலினுக்கு செம பூரிப்பு.. கொளத்தூரில் முதல்வர் கையில் பூத்த "மகரதம்".. காஞ்சி டூ திருவள்ளூர் பலே
சென்னை: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்றும் சென்னையில் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. பிரச்சாரத்திற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாளை மறுநாள் அதாவது 17ம்தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

தீவிரம்: இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநில அரசியல் கட்சி தலைவர்கள், பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.. சென்னையில் இன்று திறந்த வெளி வேனில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.. காலை 7 மணிக்கு திறந்த வேனில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களிலும், ஜி.கே.எம்.காலனியில் திறந்த வேனிலும் பிரச்சாரம் செய்து வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அதேபோல, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் க.செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.
நாளை 17ம் தேதி புதன்கிழமை, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.. இறுதியில், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
எடப்பாடி பழனிசாமி: இதுபோலவே, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. நேற்றைய தினம் மத்திய சென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, தென்சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் வருகையையொட்டி இன்று கொளத்தூரே விழாக்கோலம் பூண்டது.. நடனக்கலைஞர்கள், சிறுமியரின் நடன நிகழ்ச்சிகள், மேளதாளம் என கொளத்தூரே படுபிஸியாகிவிட்டது. வழிநெடுகிலும் முகமலர்ச்சியோடு கையசைத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். புதுமைப்பெண் திட்டத்தால் பயனடைந்து வரும் மாணவிகள் முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் நன்றி தெரிவித்தார்கள்..
அதேபோல, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி இல்லத்தரசிகளும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதல்வரின் சீதனம் ரூ.1000க்கு நன்றி என்று இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.. கொளத்தூரில் வீதி, வீதியாகச் செல்லும் ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வரிடம் தன் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு ஒரு பெண் கேட்டுக் கொண்டார்.. உடனே ஸ்டாலின், அந்த பெண்ணின் குழந்தைக்கு "மரகதம்" என்று பெயர் சூட்டினார்.
-
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
அரசு வேலை.. தாமதம் இருக்காது.. உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.!












Click it and Unblock the Notifications