சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநர் உயிருக்கு ஆபத்து.. ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்க.. அமித் ஷாவிற்கு கடிதம் எழுத போறேன் - அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு, பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுத போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி சென்றார். இந்த நிலையில் இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

அதோடு மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் . ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அங்கே ஏன் நின்றார்? அந்த ஒரு போட்டோவை பார்த்தீங்களா.. விதியை மீறிய ஆளுநர் ரவி? நடந்தது என்ன? அங்கே ஏன் நின்றார்? அந்த ஒரு போட்டோவை பார்த்தீங்களா.. விதியை மீறிய ஆளுநர் ரவி? நடந்தது என்ன?

அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை பேட்டி

இது தொடர்பாக அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு ஆளுனர் ரவி மயிலாடுதுறையில் ஆதீனத்தை சந்திக்க வந்தார். அவர் ஞானம் யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். அதன் துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த 3 நாட்களாக காவல்துறைக்கு, அரசுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை என்ன விதமான அசம்பாவிதம் நடக்க கூடாது என்று நினைத்தோமோ அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

திமுக தொண்டர்கள், அந்த பகுதி தலைவர்கள், அவரின் கூட்டணி கட்சியினர்.. ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு கவர்னருக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். எப்போது ஒரு மாநில முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு, தனது கட்சியின் சித்தாந்தத்திற்காக இந்தியா அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளவர்களை எதிர்த்து வருகிறார்.

ஆளுநர் கருப்பு கொடி

ஆளுநர் கருப்பு கொடி

இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். மக்கள் எதிர்பார்த்தது இதுதான். இன்று ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு உள்ள திமுகவினர் நடத்திய சாதாரண தாக்குதல் கிடையாது. அங்கு கடந்த 3 நாட்களாக திமுக தலைவர்கள் அளித்த எதிர்ப்பு காரணமாக ஆளுநரை இப்போது தொண்டர்கள் தாக்கி உள்ளனர். ஆளுநரிடம் ஸ்டாலின் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அமித் ஷா

அமித் ஷா

இல்லையென்றால் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையே ராஜினாமா செய்ய வேண்டும். பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கடிதம் எழுத போகிறேன். தமிழ்நாட்டின் உள்துறை விவகாரத்தில் அமித் ஷா தலையிட வேண்டும்.

ஸ்டாலின் ராஜினாமா

ஸ்டாலின் ராஜினாமா

தமிழ்நாட்டில் ஏன் சட்ட ஒழுங்கு கெட்டது என்று அவர் விசாரிக்க வேண்டும். டிஜிபிக்கு உடனே அமித் ஷா சம்மன் அனுப்ப வேண்டும். கவர்னருக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை. பாதுகாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது என்று போலீசாருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். இதை பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுத உள்ளேன். சட்ட ஒழுங்கை சரி செய்ய முடியாத முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை ராஜினாமா செய்ய வேண்டும், என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Tamil Nadu CM should resign fro not providing security to governor Ravi says BJP Annamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X