"மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படும்.." பெண்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கிடையே அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 1000 ரூபாய் உரிமை தொகை வெறும் தொடக்கம் தான் என்றும் நிச்சயம் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்றும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உரிமைத் தொகை விரிவாக்கம் குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின்
எல்லாருக்கும் எல்லாமும் என்ற சமத்துவச் சமுதாயம் வர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்ற முதல்வர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை கதைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனேன் என்றும் அரசின் திட்டங்கள் என்பது கொள்கை, சிந்தனையின் செயல்வடிவமாகும் என்றும் பேசினார். மற்ற மாநிலங்களும் கூட உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன என்ற அவர், இதுவே உரிமைத் தொகை திட்டத்தின் மாபெரும் வெற்றி என்றும் மக்கள் திட்டங்களை இலவசங்கள் எனக் கொச்சைப்படுத்துவோர் கூட இதைச் செயல்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், இப்போது மொத்தம் 10 மாநிலங்களில் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற முதல்வர் அந்த மாநிலங்களையும் பட்டியலிட்டார். இந்த ரூ.1000 உரிமைத் தொகை என்பது தொடக்கம் தான் என்ற முதல்வர் ஸ்டாலின், தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட நிச்சயம் உரிமைத் தொகை உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
திராவிட மாடல்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நாம் வாழும் சமூகம் சாதி மத இன மொழி - பாலினப் பாகுபாடு இல்லாமல், "எல்லாருக்கும் எல்லாம்" என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம்! அதனால்தான், 2021 மே 7-ஆம் நாள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடனே. "நம்முடைய அரசு, திராவி மாடல் அரசு" என்று சொல்லி, ஏராளமான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினேன்.
உரிமை தொகை
நம்முடைய லட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்"! இந்த திட்டத்தை அறிவிக்கும்போதே. தெளிவாக சொல்லிவிட்டோம் இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! திட்டங்கள் என்பது, கொள்கைகளின் சிந்தனைகளின் செயல்வடிவம்! ஒரு திட்டத்தின் வெற்றி என்பது, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மட்டுமல்ல; அந்தத் திட்டத்தை பொதுமக்கள் எந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, தங்களின் வாழ்க்கைத்தரத்தை, சமூக நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான். அந்த திட்டத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது! அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது!
10 மாநிலங்கள்
இந்த கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்! இன்னும் சொல்கிறேன் மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், சத்திஸ்கர், ஒடிசா. புதுச்சேரி அதுமட்டுமல்ல. தற்போது கர்நாடகா. ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம். சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது!
இதையெல்லாம் நான் மேடை அலங்காரத்திற்காக. பெருமைக்காக சொல்கிறேன் என்று யாரும் கருதவேண்டாம். நாம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தால், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து, பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்து, அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள்!
உரிமை தொகை உயரும்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் இதுவரைக்கும் ஒரு கோடியே 13 இலட்சத்து 75 ஆயிரத்து 492 சகோதரிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் என்று இதுவரைக்கும் 28 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்! எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சொன்னேன். அதற்காக, மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக, விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இன்றைக்கு காலையில், 16 இலட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் போட்டுவிட்டோம்!
இனிமேல், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் தொடர்ந்து கிடைக்கும்! தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும்! பெண்களின் உரிமையும் உயரும்!" என்றார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications