Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் இன்று புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்ந்துள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான ரூ 1000 உரிமைத் தொகை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அன்று முதல் நிபந்தனை வரம்புக்குள் வரும் பெண்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கிடைத்து வருகிறது.

rs 1000 aid mk stalin chennai 1000

இந்த திட்டத்திற்காக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அதில் தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் சிலர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தமிழக அரசின் கணக்கீட்டின்படி சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு ரூ 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியானால் அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்து சேருகிறது.

கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரத்து 926 கோடியே 35 லட்சமும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.13 ஆயிரத்து 790 கோடியே 61 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ரூ 9,121 கோடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை, ரூ 30,838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் படி "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த உரிமைத் தொகையை பெற ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் இருக்க வேண்டும், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம் 3600 யூனிட்டுக்கும் குறைவாக இருத்தல் வேண்டும் என்ற விதிகள் வகுக்கப்பட்டன.

இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் மூலம் மொத்தம் 28 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெற்று வரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வழங்குகிறார்.வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின். இவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ 1000 வரவு வைக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் இந்த திட்டத்தில் பயன்படுவோரின் எண்ணிக்கை 1.34 கோடியாகும்.

இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் மூலம் மொத்தம் 28 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெற்று வரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வழங்கினார்.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின். இவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ 1000 வரவு வைக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் இந்த திட்டத்தில் பயன்படுவோரின் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+