ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ்.. சீட்டுகளை கலைத்து.. துல்லியமான முடிவு.. இந்த 3 விஷயத்தை நோட் பண்ணீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அமைச்சரவை மாற்றம் நடக்கிறது. இன்று அமைச்சரவை மாற்றம் நடக்கிறது என்பதை விட.. அமைச்சரவை மாற்றம் செய்வதற்கான நேரம்.. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் அதிக கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவியேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவில் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று அமைச்சரை மாற்றத்தின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளனர்.
கவனிக்க வேண்டிய விஷயம்: இந்த அமைச்சரவை மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டு உள்ளார் என்றுதான் கூற வேண்டும். அமைச்சரவை மாற்றத்தை விட.. அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட நேரம்தான் முக்கியம்.
1. செந்தில் பாலாஜிக்கு சான்ஸ்: செந்தில் பாலாஜி வரும் வரை.. பொறுத்திருந்து இந்த முடிவை எடுத்து உள்ளனர். அவர் வருவதற்கு முன் அமைச்சரவையை மாற்றினால் சரியாக இருக்காது. செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக கட்சி மூத்த நிர்வாகிகளிடம் சொல்லி வந்துள்ளார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது.
2. உதயநிதிக்கு சரியான நேரத்தில் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்குவதற்கு போதிய நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி.. ஸ்டாலினுக்கு பதவியை கொடுக்க நீண்ட காலம் எடுத்தார் . அமைச்சர் பதவி வழங்கினால் கட்சியின் செயல் தலைவர் பதவியை கொடுக்க நீண்ட நேரம் எடுத்தார். ஆனால் ஸ்டாலின் சரியான நேரத்தில்.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை கொடுத்துள்ளார். கட்சியின் எதிர்காலம் .. தனது ஆரோக்கியம் என்று பல விஷயங்களை மனதில் வைத்து ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார்.
3. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில்.. 3 தலித் பிரதிநிதிகளுக்கு முக்கியமான அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. தலித் முதல்வர் என்ற வாதம் தமிழ்நாட்டில் எழுந்துள்ள நிலையில்தான்.. தலித் சமூக எம்எல்ஏக்களுக்கு முக்கியமான இலாக்காக்கள் வழங்கப்பட உள்ளன.
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு ஆதிதிராவிட நலத்துறை இன்று வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் அக்கா கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறை வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தலித் பிரதிநிதிகளுக்கு முக்கிய அமைச்சரவை இலாக்காக்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் சமீப நாட்களாக தலித் முதல்வர் என்ற விவாதம் எழுந்துள்ளது. விசிக ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் இதை பற்றி பேசி இருந்தார். இதை தொடர்ந்து தலித் முதல்வர் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் தலித் பிரதிநிதிகளுக்கு முக்கிய அமைச்சரவை இலாக்காக்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications