Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாஸ்டிக் கழிவுகள்.. கடல் உயிரினங்களை காக்க தடுப்பான்கள்.. ரூ.1675 கோடி நிதி.. சுப்ரியா சாஹு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலோர மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நதிகள் வழியாக பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சென்று சேருவதை தடுக்க 14 மாவட்டங்களில் தடுப்பான்கள் அமைக்கும் பணிக்காக அரசு ரூ.1675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்வர் இத்திட்டத்தை சிறப்பாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுற்றுசூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

கடலில் நதிகள் சென்று சேரும் இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதற்கான தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் கடலோரப் பகுதிகளையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் ரூ.1,675 கோடி செலவில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டு உள்ளது.

 Tamil Nadu Coastal Restoration Mission at a cost of Rs 1,675 crore says Supriya Sahu IAS

இதுகுறித்து சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில்,
தமிழ்நாடு சட்டசபையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பை நிதித்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அதில், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தா லும், மக்கள்தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும் கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வரும் காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசு பாட்டை குறைக்கவும், கடல் உயிரியல் பன்முகத் தன்மையை பாதுகாக்க வும், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டத்தை ரூ.2ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுடன் அடுத்த 5ஆண்டுகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து உலக வங்கியின் உதவி கோரப்பட்டது. உலக வங்கி கேட்டபடி, திட்ட தொடக்க அறிக்கையை அரசு அளித்தது. அதைத் தொடர்ந்து திட்ட முன் மொழிவுக்கான அங்கீகாரத்தை உலகவங்கி அளித்துள்ளது.

இந்தத் திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலோர பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துதல், கடலோ ரத்தை பாதுகாத்தல், வாழ்வாதாரத்தை மேம் படுத்துதல், மாசுபடுதலை தணித்தல், திட்ட மேலாண்மை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.

கடலோர பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத் துதல் பிரிவின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைத்தல்; நாகை மற்றும் சென்னையில் கடல் ஆமைகள் பாது காப்பு மய்யம் அமைத்தல்: கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு மய்யத்தை தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைத்தல்; பள்ளிக்கரணை உள் ளிட்ட கடலோர சதுப்பு நிலங்களை மீட்டெடுத் தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த 5 பிரிவின்கீழ் வரும் திட்டங்களை செயல்படுத்த ரூ.1.675 கோடி தொகை செலவா கிறது. இந்தத்தொகையில் ரூ.1,172.50 கோடியை உலக வங்கியும், ரூ.502.50 கோடியை தமிழ்நாடு அரசும் பங்களிக்கும். திட்ட காலமான 2024-2029ஆம் ஆண்டுகளில் திட்டத் தொகை 5 ஆண்டு வாரியாக பிரித்தளிக்கப்படும்.

பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் விழுந்து, இறுதியாக கடலில் சென்று சேருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், கடலோர மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நதிகள் வழியாக பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சென்று சேருவதை தடுக்க 14 மாவட்டங்களில் தடுப்பான்கள் அமைக்கும் பணிக்காக அரசு ரூ.1675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்வர் இத்திட்டத்தை சிறப்பாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுற்றுசூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+