உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்!
டெல்லி: சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" மிகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது ஒரு பெரிய இயக்கமாகவே மாறி வருகிறது. இதற்கிடையே இதே பெயரில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த சில வாரங்களாகவே ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இணையத்தில் நையாண்டி இயக்கமாக ஆரம்பித்த இந்த கட்சி குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ்களுடன் வளர்ந்தது. வெறும் இணையத்தோடு நிற்காமல் இவர்கள் களத்தில் இறங்கியும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
இதற்கிடையே தமிழ்நாட்டில் இருந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி பதிவு செய்யத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் போய் இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சி. பிரம்மா பாலசுப்பிரமணியம் என்பவர் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கியுள்ளார். அவரே இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் செயல்படுகிறார்.
இவர் தனது கட்சியின் நிர்வாகிகளான ஆர். ஜனார்த்தனன் மற்றும் செய்தித் தொடர்பாளர் பி. சிவகுமார் ஆகியோருடன் டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்று, கட்சியைப் பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மாறுபட்டது
அதேநேரம் அபிஜீத் திப்கேவின் இணையதள இயக்கத்திலிருந்து தனது கட்சி மாறுபட்டது என்பதைப் பிரம்மா பாலசுப்பிரமணியம் தெளிவுபடுத்தியுள்ளார். அதே சமயம் அபிஜீத் திப்கேவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அவருடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 6-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நாளில்தான் அபிஜீத் திப்கேவின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் தனது முதல் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம்
கட்சியின் பெயர் சற்று வித்தியாசமாக இருப்பதால், அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் இவர்களை நேரில் அழைத்திருந்தது. செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின் போது, கட்சியின் கொள்கைகள் குறித்து பாலசுப்பிரமணியம் விளக்கமளித்தார். "எங்கள் கட்சி தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகப் பாடுபடும்" என்று அவர் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளார்.
கரப்பான் பூச்சி கட்சி போராட்டங்கள்
இவரது கட்சி ஒரு பக்கம் இருக்க.. அபிஜீத் திப்கேவின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நீட் உள்ளிட்ட கல்வித்துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே இவர்கள் வாதமாக இருக்கிறது. இதற்காக முதலில் டெல்லியில் இவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தொடர்ந்து பெங்களூர்- ஜெய்ப்பூர் எனப் பல நகரங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஜெய்ப்பூரில் நடந்த போராட்டத்தின் போது அபிஜித் திப்கேவை மர்ம நபர்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ












Click it and Unblock the Notifications