ஆட்சியில் பங்கு கேளுங்க.. விடாதீங்க.. டெல்லிக்கு தமிழக காங்கிரஸ் தலைகள்.. அவசரமாக அனுப்பிய மெயில்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) செயற்குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து கசிந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போன் போட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன.

தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையினால், ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கைகோர்க்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) செயற்குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து கசிந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இ மெயில் கடிதத்தில், "வெறும் இடப்பங்கீடு மட்டும் போதாது, அதிகாரப் பங்கீடும் வேண்டும்" என அதிரடி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தியின் சமூக நீதி மற்றும் நிறுவன ஒருமைப்பாடு என்ற சித்தாந்தத்தைத் தமிழகத்தில் வலுப்படுத்த, காங்கிரஸ் கட்சி வெறும் 'ஜூனியர் பார்ட்னராக' மட்டும் நீடிக்கக் கூடாது என்பதே இக்கடிதத்தின் சாராம்சம்.
தொண்டர்களின் 4 முக்கிய கோரிக்கைகள்
தமிழக காங்கிரஸ் மேலிடத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
ஆட்சியில் உறுதிசெய்யப்பட்ட பங்கு: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசாங்கத்தில் காங்கிரஸிற்குப் அதிக பங்கு இருக்க வேண்டும். இது வெறும் வாய்மொழி வாக்குறுதியாக இல்லாமல், முறைப்படியான 'ஒப்பந்தமாக' இருக்க வேண்டும்.
அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகள்: கட்சியின் தற்போதைய பலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.
உள்ளாட்சி மற்றும் வாரியங்களில் பிரதிநிதித்துவம்: உள்ளாட்சித் தேர்தல்கள், நகராட்சித் தலைமைப் பதவிகள், அரசு வாரியங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காங்கிரஸிற்கு நியாயமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் நிலையான சதவிகிதம்: அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸிற்கென ஒரு குறிப்பிட்ட சதவீத இடங்களை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
அரசியல் நெருக்கடியும் பின்னணியும்
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) வருகை மற்றும் அவர் முன்வைக்கும் 'அதிகாரப் பகிர்வு' என்ற முழக்கம், காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 58 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ், இப்போது ஆட்சியில் பங்கு கேட்பது திமுகவிற்குப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இருப்பினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூட்டணி ஆட்சித் தத்துவம் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி எனது சகோதரர் போன்றவர், மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையூட்டி வருகின்றனர்.
பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கசிந்த கடிதம் கூட்டணிக் கணக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications