“தோல்வின்னு சொல்ல முடியாது..” செல்வப்பெருந்தகை சொன்ன மழுப்பல் பதில்! பீகாரில் அடி கொஞ்சம் ஓவர்
சென்னை: "இதை தோல்வி என்று சொல்ல முடியாது. வெற்றிக்கான வாய்ப்பை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான்" என்று பீகார் தேர்தல் தோல்வி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் வெறும் 4 தொகுதிகளில் சுருங்கியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,

"காங்கிரசுக்கு எப்பவுமே பின்னடைவு கிடையாது. ஆட்சி அதிகாரத்தை சுவைக்க மட்டுமே காங்கிரஸ் பேரியக்கம் உருவாக்கப்படவில்லை. அடையாளம் அற்றவர்களுக்கு, பேச்சுரிமை இல்லாதவர்களுக்குமான இயக்கம்தான் காங்கிரஸ். நாங்கள் வெற்றி தோல்வியை பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது. இது மக்கள் இயக்கம். இயங்கிக்கொண்டே இருக்கும்.
பீகார் நிலவரத்தில், தோல்வின்னு சொல்ல முடியாது. வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கோம். தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் உறுதியான முடிவு தெரியவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். சில நேரங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது என்றும், சில நேரங்களில் ஜேடியு முன்னிலையில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எனவே ரிசல்ட் வரட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்.
வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், வெற்றி வாய்ப்பை இழந்தால் சோர்வடைவதும் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. என்னைக்கும் மக்கள் குரலாக இருப்போம். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பற்றி தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம். தேர்தல் முடிவுகள் பீகாரில் வந்த பிறகு இது குறித்து விவாதிப்போம். பீகாரில் 17 லட்சம் வாக்குகள் அகற்றப்பட்டிருக்கிறது. அதெல்லாம் என்ன வாக்குகள்? ஜனநாயகம் வீழ்ந்து விடக்கூடாது, வீழ்வதற்கு யாரும் அனுமதிக்க கூடாது, ஜனநாயகம் வென்றெடுக்க வேண்டும். இதுதான் நேரு பிறந்த நாளில் எங்களுடைய பிரகடனம்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றியிருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் பெரும்பான்மை பெற்ற பாஜக, கடந்த 2019ல் பெரும்பான்மை பெற்ற பாஜக, 2024ல் பெரும்பான்மை பெறமுடியவில்லையே. காங்கிரசால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications