கலாட்டா ஸ்டார்ட்! மீண்டும் பழைய மாதிரியே நடக்குதே.. தமிழ்நாட்டில் முக்கிய கட்சிக்கு.. பெரிய சிக்கல்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக கிராம சீரமைப்பு கமிட்டியை பற்றிதான் ரகளைகள் நடந்து கொண்டுருக்கின்றன. அகில இந்திய காங்கிரசின் செயற் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி சில உத்தரவுகள் மாநில தலைமைக்கு பிறப்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பீட்டர் அல்ஃபோன்சை தலைவராக நியமித்து கிராம சீரமைப்பு கமிட்டியை அமைத்தார் செல்வப்பெருந்தகை. பீட்டரின் நியமனத்துக்கு கட்சியில் கடும் எதிர்ப்புக் கிளம்பி வருவதால், கிராம கமிட்டி முன்னெடுக்க வேண்டிய எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை.

இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியில் கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 8-ந்தேதி சென்னைக்கு வந்த கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் கன்னிமாரா ஹோட்டலில் தங்கினார். அவரை, காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் பலர் சந்தித்தனர். கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் விவாதித்தார் அஜோய்.
தேர்தல் பணிகள்:
அப்போது, "சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையிலும், தேர்தல் பணிகளை காங்கிரசும் வேகமாக தொடங்க வேண்டித்தான் கிராம கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், கமிட்டியின் தலைவராக பீட்டர் அல்ஃபோன்சை நியமித்தது கட்சி தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பீட்டர் மாற்றப்படாவிட்டால் யாரும் வேலை பார்க்க முடியாது" என ஆவேசமாக சொல்லியிருக்கிறார்கள், கமிட்டிக்கு எதிராக காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் இருப்பதால் கட்சியின் தேர்தல் பணிகளை செயல்படுத்துவதில் திண்டாடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், பீட்டரின் நியமனத்துக்கு எதிராக கிளர்ச்சி உருவாகியிருப்பதை ராகுல்காந்தியிடம் முறையிடுவதற்கு திட்டமிட்டுள்ளாராம் அஜோய்க்குமார்
காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டமும் சமீபத்தில் நடந்திருக்கிறது. மாவட்ட தலைவர்களாக வர நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அண்மையில் அறிவித்திருந்தார். மாவட்ட தலைவர் உட்பட மாநில நிர்வாக பொறுப்புகளுக்கும் விண்ணப்பிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நன்கொடை:
ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட தொகையை கட்சி நன்கொடையாகவும் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இதுவும் கட்சிக்குள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. பதவி கேட்பதற்கு நன்கொடை தர வேண்டுமா? இதென்ன புது கூத்தாக இருக்கிறதே? என்று கதர்ச்சட்டையினர் கொந்தளிக்கின்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் பிரகடனத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதாவது மாநில மற்றும் மாவட்ட பதவிகளில் நியமிக்கப்படுபவர்களில் குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் பதவி வழங்க வேண்டும் ; 5 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட தலைவராக இருப்பவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக்கூடாது, பதவிகளில் 50 சதவீதத்தின் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ; மற்ற 50 சதவீதத்தில் சமூக நீதியை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற விதிகள் கொண்டு வரப்பட்டன.
மாவட்ட தலைவர்கள் முடிவு:
அதன்படிதான் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிக்க தமிழக காங்கிரஸ் முடிவு எடுக்கப்பட்டிருப்பதால், இப்போது மாவட்ட தலைவர்களாக இருக்கும் 90 சதவீத பேருக்கு மீண்டும் பதவி கிடைக்காது. இந்த நிலையில், திருநாவுக்கரசை சந்தித்து மாவட்ட தலைவர்கள் பலரும் புலம்பித்தள்ளினர். அவர்களிடம், "இப்படி புலம்புவதால் ஆகப்போவது எதுவும் இல்லை. உங்கள் உரிமைக்காக வெளிப்படையாக போராடுங்கள். அப்போதுதான் நல்லதுநடக்கும்" என்று தூண்டி விட்டுள்ளார் திருநாவுக்கரசு . இதனால் சத்தியமூர்த்திபவனில் பொங்கலுக்குப் பிறகு பஞ்சாயத்து வெடிக்கலாம் என்கிறார்கள் கதர்ச்சட்டையினர்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications