பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டாத 1991-1996 அதிமுக ஆட்சி! வாச்சாத்தி வன்கொடுமை பற்றி காங்கிரஸ் வேதனை!
சென்னை: 1991 -1996 அதிமுக ஆட்சியில் பழங்குடியின பெண்களைப் பாதுகாக்க அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு அதிகாரிகளை பாதுகாக்கவே முனைப்பு காட்டப்பட்டதாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் சாடியுள்ளார்.
பெண்ணினத்தைத் தலைகுனிய வைத்த பழங்குடியின மக்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமைக்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மிக,மிகக் காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பு என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''அதிமுக ஆட்சியில் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 குற்றவாளிகளுக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வழங்கியிருக்கிறது.
அன்றைய அதிமுக ஆட்சியில் பழங்குடியின பெண்களைப் பாதுகாக்க அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு அதிகாரிகளை பாதுகாக்க முற்பட்டதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வனத்துறையினர். காவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் அந்த கிராமம் முழுவதையும் திடீர் சோதனை நடத்தி வன்முறை தாக்குதல் நடத்தினர் அதோடு பழங்குடியின பெண்களைப் பலாத்காரம் செய்த வரலாறு காணாத கொடுமைக்கு இன்றைக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
இந்த தீர்ப்பை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்குத் தலைவணங்குகிறோம். பாராட்டுகிறோம். இந்த பழங்குடி இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உட்பட வனத்துறையினர். காவல் துறையினர்.வருவாய்த்துறையினர் என்று 259 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். "குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்" என 2011 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பில் மேல்முறையீடு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குகிற போது, குற்றஞ்சாட்டப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே பெண்ணினத்தைத் தலைகுனிய வைத்த பழங்குடியின மக்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடுமைக்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மிக,மிகக் காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பாகும். இது நீதி பரிபாலன முறைக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க தலைமை நீதிபதி உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.''
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications