தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா... 20 ஆயிரத்தை நெருங்கியது - 147 பேர் பலி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் 19,558 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 147 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய உச்சமாக கொரோனாவிற்கு 147 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,86,344 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை பேராக 14,193 அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. தினசரியும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தினசரியும் சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 19,558 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டு வீடு திரும்பியவர்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய தினம் 20 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,86,344 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 17,164 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,54,746 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று 1,17,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,51,452 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,28,13,859 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்த பரிசோதனை
இன்று ஒரே நாளில் 1,45,731 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,24,24,611 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

147 பேர் மரணம்
இன்று கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,193 பேராக அதிகரித்துள்ளது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications