தமிழகத்தில் புதிய கொரோனா தொற்று 5242...டிஸ்சார்ஜ் 5,222...உயிரிழப்பு 67!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5242 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரைக்கும் தமிழகத்தில் 6,51,370 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 31 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,272 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 1,80,751 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் சென்னையில் 13,577 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுவதும் 5,97,033 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Tamil Nadu Corona updates: new cases 5242; equal persons have discharged from the hospital

இன்று மட்டும் தமிழகத்தில் 5,222 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மட்டும் 89,450 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமாக கொரோனா தொற்று பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 79,96,148 ஆக உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக சென்னையில் 1173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, செங்கல்பட்டில் 455 பேரும், கோவையில் 216 பேரும், கடலூரில் 165 பேரும், சேலத்தில் 250 பேரும், தஞ்சாவூரில் 354 பேரும், திருவண்ணாமலையில் 229 பேரும், திருப்பூரில் 201 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Corona updates: new cases 5242; equal persons have discharged from the hospital

மாநிலம் முழுவதும் இன்னும் 44,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நேற்று 44,197 ஆக இருந்தது. இன்று புதிதாக 5,242 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கையில், அதற்கு இணையாக 5,222 பேர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+