தமிழகத்தில் வேகமாக குறைந்து வரும் கொரோனா.. இன்று 28,864 பேருக்கு பாதிப்பு.. ஆனால் உயிரிழப்பு அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 30,016 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 28,864 என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இரண்டு அலைகளிலும் சேர்த்து 20,68,580பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 17,39,280 பேர் மீண்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 3,05,546 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 28,864 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,68,580 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 32,982 பேர் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17,39,280 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 3,05,546 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு எவ்வளவு மரணம்

எங்கு எவ்வளவு மரணம்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 493 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 23,754 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கொரோனாவால் சென்னையில் 93 பேர் மரணம் அடைந்துள்ளனர். கோவையில் 47 பேரும், செங்கல்பட்டில் 37 பேரும், ஈரோட்டில் 22 பேரும், வேலூரில் 21 பேரும், காஞ்சிபுரத்தில் 20 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருச்சி, திருப்பூரிலும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

RT-PCR சோதனை

RT-PCR சோதனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளையும் தடுப்பூசி கொடுப்பதையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,62,357 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,94,017 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 1,73,351 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 2,75,11,443 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

கோவை முதலிடம்

கோவை முதலிடம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், சேலம், மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கோவையில் 3537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் இன்று 2689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 1784 பேரும், ஈரோடுக்கு அடுத்தபடியாக திருப்பூரில் 1496 பேருக்கும், சேலத்தில் 1295 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோயாளிகள்

சென்னையில் நோயாளிகள்

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தமிழகத்திலேயே சென்னையை முந்தி கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் தற்போது 39047
பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் சென்னையில் அதைவிட குறைவாக 35423 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையின் மக்கள் தொகை, கோவையின் மக்கள் தொகையை ஒப்பிடும் போது, கோவையில் பாதிப்பு மிகமிக அதிகம் ஆகும். கோவை சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+