தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா.. சென்னையில் ஒரே நாளில் 12 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 19,061 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதத்தை ஒப்பிடும் போது இந்த மாதம் வெகுவாக குறைந்து விட்டது, 5 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 2500 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 19 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,413 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,06,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 681 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 270 பேரும், சேலத்தில் 135 பேரும், திருவள்ளூரில் 90 பேரும், திருப்பூரில் 117 பேரும், காஞ்சிபுரத்தில் 103 பேரும், ஈரோட்டில் 99 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 28 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,272 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 3 பேரும், காஞ்சிபுரம், புதுக்கோட்டையில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை எவ்வளவு
தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 80,192 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,03,25,440 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 79,388 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,00,52,393 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 19,061 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 203085 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 6080 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 238 பேரும், திருவள்ளூரில் 148 பேரும், சேலத்தில் 130 பேரும், செங்கல்பட்டில் 112 பேரும், திருப்பூரில் 110 பேரும், காஞ்சிபுரத்தில் 103 பேரும், ஈரோட்டில் 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications