கொரோனாவால் குறைந்து வரும் உயிரிழப்பு.. உயரும் டிஸ்சார்ஜ்.. இன்று செம்ம மாற்றம்
சென்னை: தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு 6000க்கு கீழான நிலையிலேயே இருக்கிறது. ஆனால் நல்ல செய்தியாக உயிரிழப்பு எண்ணிக்கை சரசரவென குறைந்துள்ளது. இதேபோல் குணம் அடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகீறது
தமிழகத்தில் ஊரடங்கில் மிகப்பெரிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்குமா என்று அச்சம் நிலவிய நிலையில் தொற்று பாதிப்பு உயராமல் 6000 என்கிற அளவிலேயே உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதில் இன்று ஒரே நாளில் 6,334 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 3,92,507 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

79 பேர் பலி
தமிழகத்தில் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 79 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,687 ஆக அதிகரித்துள்ளது. இன்று மிக அதிகபட்சமாக சென்னையில் 12 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் 6 பேரும், கோவையில் 4 பேரும், திண்டுக்கல்லில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.

சென்னை கொரோனா
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139720 ஆக உயர்ந்தது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 1,24,891 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 2826 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 12003 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட கொரோனா
தமிழகத்தில் பிற மாவட்டங்களை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 595 பேரும், கடலூரில் 499 பேரும், செங்கல்பட்டில் 370 பேரும், திருவள்ளூரில் 260 பேரும், சேலத்தில் 238 பேரும் , கள்ளக்குறிச்சியில் 182 பேரும், விழுப்புரத்தில் 148 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 152 பேரும், மதுரையில் 123 பேரும், தஞ்சாவூரில் 164 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவு பரிசோதனை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83,699 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 51,30,741 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 81,588 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 49,62,357 தனிநபர்களுக்கு கொரோனாவை கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 51,633 பேர் மட்டுமே ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications