தமிழகத்தில் கொரோனா.. எப்படி போகிறது டிரெண்ட்? ஆறுதல் தருகிறதா, அச்சுறுத்துக்கிறதா? டேட்டாவை பாருங்க
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
கொரோனா நோய் பரவலை பொருத்த அளவில் ஓர் இடத்தில் மிக அதிகமாக பரவி அதன் பிறகு மெல்ல மெல்ல குறைவதுதான் இயல்பாக இருந்து வருகிறது. உலகம் முழுக்க இந்த ட்ரெண்ட் காணப்படுகிறது.
தமிழகத்திலும், சில வாரங்கள் முன்பு வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு அதிகரித்தது. அதற்கு முக்கியமான காரணம் சென்னையில் தினமும் அதிகப்படியான பாதிப்புகள் பதிவானதுதான்.

குறைவான கேஸ்கள்
இப்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது.. சில தரவுகளை வைத்து பார்க்கலாம். இந்த தரவுகளை ஸ்ரீதர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கான தமிழகத்தின் சராசரி கேஸ்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஜூலை மாதம் 30ஆம் தேதி முதல் தமிழகத்தில் தினசரி கேஸ் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

சராசரி விகிதம்
ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல், 7 நாள் சராசரி பரிசோதனை நோய் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது. அதாவது 100 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளும் போது அதில் 10க்கும் குறைவானவர்களுக்கு மட்டும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் எண்ணிக்கை
நேற்று 19ஆம் தேதி நிலவரப்படி பரிசோதனை செய்தவர்களில் 8.5 சதவீதம் பேருக்கு நோய் தொற்று இருந்துள்ளது. அதேநேரம் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் மொத்த தினசரி கொரோனா பலி எண்ணிக்கை என்பது 100 விட அதிகமாக இருந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இவ்வாறு அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அரசு கவனம்
தற்போது சிறு நகரங்கள் மற்றும் சிறிய மாவட்டங்களில் நோய் பரவி வருவதால் அங்கு போதிய அளவுக்கு சிகிச்சை வசதிகள் இல்லாததும் இதுபோன்ற இறப்பு விகிதம் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுனர்கள்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications