மெதுவாக குறையும் நோயாளிகள் எண்ணிக்கை.. நிச்சயம் எல்லாம் மாறும்., நம்பிக்கை தரும் கொரோனா அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34,429 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 19,201பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதத்தை ஒப்பிடும் போது இந்த மாதம் வெகுவாக குறைந்துவிட்டது, 5 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 2500 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 19 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34,429 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,504 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,04,031 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 844 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 240 பேரும், சேலத்தில் 125 பேரும், திருவள்ளூரில் 126 பேரும், செங்கல்பட்டில் 132 பேரும்,. ஈரோட்டில் 70 பேரும், திருப்பூரில் 106 பேரும், நாமக்கலில் 86 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 30 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,244 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 4 பேரும், ஈரோட்டில் 3 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், மதுரை, நாகப்பட்டினத்தில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை எவ்வளவு
தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 75,331 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,02,45,248 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 74,496 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 99,73,005 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 19,154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்று ஒரே நாளில் 657 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 202495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 6182 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 220 பேரும், செங்கல்பட்டில் 151 பேரும், திருவள்ளூரில் 107 பேரும், சேலத்தில் 103 பேரும், திருப்பூரில் 122 பேரும், ஈரோட்டில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications