இதுதான் தமிழ்நாடு.. சூரிய ஒளி மின்சாரத்தில் ரெக்கார்ட்.. இவ்வளவு உற்பத்தியா? ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை: மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.
அனல் மின் நிலையம், அணு மின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். செலவு குறைவு. அதேபோல் சுற்றுசுழலுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. முக்கியமாக ஆசியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காற்றாலை மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக உள்ளது.

மின்சாரம்
நவீன தொழில்நுட்பம், அதிக மின்சார உற்பத்தி என்று காற்றாலை உற்பத்தியில் டென்மார்க் பல புரட்சிகளை செய்துள்ளது. இதன் காரணமாகவே உலகில் பல வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தியை ஏற்படுத்தி டென்மார்க் நிறுவனங்களை அல்லது டென்மார்க் அரசை அணுகுகிறது. டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 47% மின்சாரம் கடலில் அமைக்கப்பட்டு இருக்கும் காற்றாலை மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாட்டிலும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

காற்றாலை
தமிழ்நாடு தனி நாடாக வைத்து பார்த்தால் உலகிலேயே இரண்டாவது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நாடாக இருக்கும். இன்னும் பத்து வருடங்களில் டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 85% வரை காற்றாலை மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படும் என்கிறார்கள். கடலில், கடலுக்கு அருகே, நிலத்தில் என்று மூன்று வகையான காற்றாலை திட்டங்களை அந்த நாடு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடும் காற்றாலை மின்சார உற்பத்திக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. அவர்களுடன் இதற்கான சில ஒப்பந்தங்களை போட்டுள்ளது.

தமிழ்நாடு சாதனை
இது ஒரு புறம் இருக்க சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். 150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

ராஜஸ்தான்
அந்த வகையில் நேற்று தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (22/12/2022) 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. தமிழ்நாடு இன்னும் சூரிய ஒளி மின்சாரத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நிறைய வேற்றுநிலப்பரப்பு தேவை என்பதால் தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்துவது இல்லை. ராஜஸ்தானில் நிறைய பாலைவன பகுதிகள், வெற்று நிலப்பகுதிகள் உள்ளதால் அங்கு 14,454 மெகா வாட் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 5,690 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேனல்கள் உள்ளன.

உற்பத்தி
தமிழ்நாட்டில் 5,690 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேனல்கள் இருந்தாலும் இவை எப்போதும் 100% மின் உற்பத்தியை மேற்கொள்வது. இதில் நிறைய மின் இழப்புகள் இருக்கும். வானிலை காரணமாக மின் உற்பத்தி குறையும். இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் 4141 MW மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் இதுதான் மிக அதிகம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications