தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. இன்று 835 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. ஆக்டிவ் கேஸ்களும் சரிவு
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 835 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நவ.15ஆம் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 835 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 27,10,756 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது. தமிழகத்தின் பாசிட்டிவ் விகிதம் தற்போது 0.8%ஆக உள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூரில் 1.6%ஆகவும் நாமக்கல் 1.5%,ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. தலைநகர் சென்னையில் 0.9%ஆகவே பாசிட்டிவ் விகிதம் நீட்டிக்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் என மொத்தம் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,238 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 10,372ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 10,271ஆகக் குறைந்துள்ளது அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 924 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,64,247 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் சென்னை தான் மிக மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் இன்று மொத்தம் 98 பேருக்கும் செங்கல்பட்டில் 70 பேருக்கும் ஈரோட்டில் 63 பேருக்கும் திருப்பூரில் 56 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications