White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தின் தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ 1,28,934 கடன் உள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதம் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வாங்கிய கடன் மட்டும் ரூ 5 லட்சம் கோடி என மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை (WHITE PAPER ON THE FISCAL MANAGEMENT OF TAMIL NADU) வெளியிட்டார்.

முதலில் இந்த வெள்ளை அறிக்கை ஏன் என்பதை தெரிவித்திருந்தார். அதன் பிறகு 22 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை வாசித்து வருகிறார். அதில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 28 சதவீதமாகும்.
கடந்த 2021- 2022 ஆம் ஆண்டு தனிநபரின் கடன் சுமை 67,087 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகத்தில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ 1,28,934 கடன் இருக்கிறது.
திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது. 60 ஆண்டில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ 5 லட்சம் கோடி. அதை விட திமுக ஆட்சியில் அதிக கடன் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் கடன் அளவு 14.3 சதவீதம் ஆகும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டி மட்டுமே 67 ஆயிரம் கோடி செலுத்துகிறது. மகாாஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.
2021- 2022 ஆம் ஆண்டில் 46,528 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2025- 2026-ல் 78,324 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 2.25 சதவீதம் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது.
மொத்த நிலுவைக் கடன்- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 78,324 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை என்பது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம். மொத்தக் கடன் ரூ 5 லட்சம் கோடியிலிருந்து ரூ 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தை விட அதிகரித்துள்ளது. தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ 13.18 லட்சம் கோடியாகும். தனி நபர் கடன் ரூ 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது.
அன்றாடச் செலவுகளுக்கே அரசு கடன் வாங்குகிறது. மொத்த வருவாயில் 22.8 சதவீதம் வட்டிக்கே செல்கிறது. சொந்த வரி வருவாய் விகிதம் 5,45 சதவீதம் சரிந்துள்ளது, முத்திரைத் தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட குறைந்துள்ளது. கனிம வளத் துறையில் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூலதன செலவினம் 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டாய செலவினம் 64.4 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு?












Click it and Unblock the Notifications