அத்துமீறும் அரசுபள்ளி மாணவர்கள்! நம் கையை நாமே வெட்டுவது போல்உள்ளது! எச்சரித்த டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை : அரசுப்பள்ளிகளில் ஆசிரியரை தாக்க முற்படுவது, அங்கிருக்கும் பொருட்களை உடைப்பது போன்ற செயல்களை மாணவர்கள் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் எனவும் இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்கக்கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரிடம் அத்துமீறும் சம்பவங்கள் தற்போது வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சக மாணவர்களை வகுப்பறைக்குள் அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளும் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்

டிஜிபி சைலேந்திர பாபு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நான் இரண்டு காணொலிகளைப் பார்த்தேன், அதில் அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் தாக்க முற்படுவது போல இருந்தது. இன்னொரு காணொலியில் வகுப்பில் இருக்கக் கூடிய டேபிள் சேர் போன்ற பொருட்களை உடைத்தனர். இதனைப் பார்க்கும் போது பாரதியார் கூறியதைப் போல நெஞ்சு பொறுக்குதில்லையே என்பது தான் நினைவுக்கு வந்தது. மாணவர்களே நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நம் பெற்றோர்கள் ஏன் நம்மை அரசுப்பள்ளிக்கு அனுப்பினார்கள். அவர்களிடம் அதிகமான வருமானம் கிடையாது சொத்துக்கள் கிடையாது.

பள்ளி தான் சொத்து
உங்கள் அப்பா அம்மாவுக்கு சொத்து இல்லை. உங்களுக்கு நிறைய சொத்து இருக்கிறது. நிறைய ஆதாரங்கள் இருக்கிறது நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளிதான் உங்கள் சொத்து அங்கிருக்கும் விளையாட்டு மைதானம் அதுதான் உங்கள் சொத்து அந்த வகுப்பறை உங்கள் சொத்து. நாங்கள் படிக்கும் போது பென்ச் டேபிள் கிடையாது தரையில் அமர்ந்துதான் படிப்போம். இப்போது அரசு உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது. அதை நீங்கள் உடைக்கிறீர்கள்.அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் தான் உங்கள் சொத்து. அவர்களால் தான் நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

வேதனை அளிக்கிறது
ஆசிரியரை அடிக்க மாணவன் கை ஓங்குவது வேதனை அளிக்கிறது ஏன் இது போன்று நடக்கிறது. ஆசிரியர்கள் தான் நமக்கு அனைத்தையும் கற்பித்தவர்கள். ஆசிரியர்கள் தான் நமக்கு மிகப் பெரிய ஆதாரம். அவர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அறிவு செயல்திறன் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய மாணவர்கள்,வன்முறைச் செயலை ஏன் செய்கிறீர்கள். இது நமது வீட்டையே நாம் கொளுத்துவது போல் இருக்கிறது. நம் கைகளை நாமே வெட்டிப் போடுவது போல் இருக்கிறது.

சட்டப்படி குற்றம்
தயவுசெய்து மாணவர்கள் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். பள்ளிக்கு மிகப்பெரிய நோக்கத்தோடு நாம் வருகிறோம். ஒரு நல்ல மனிதனாக , சிந்தனை மிக்க மனிதனாக வளர வேண்டிய மாணவர்கள், பள்ளிக்கூடத்திற்கு மரியாதை கொடுக்கவேண்டும் ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற வன்முறைகள் சட்டப்படி குற்றம். சட்டம் மாணவர்களுக்கு சில பாதுகாப்பை கொடுத்திருந்தாலும் இது குற்றமாகக் கருதப்படும் எனவே இதுபோன்ற செயல்களை மாணவர்கள் ஈடுபட வேண்டாம்", என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications