சர்ச்சை.. நாளை ரிலீசாகும் ‛தி கேரளா ஸ்டோரி’ படம்.. டிஜிபி சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை வெளியாகி உள்ளது. இந்த படத்தை வெளியிட தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் தான் டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
ஹிந்தி திரைப்பட இயக்குனர் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கி இருக்கும் திரைப்படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து சர்ச்சை வெடித்தது. உண்மைக்கு மாறான கதையம்சத்துடன் வன்மத்தை விதைக்கும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவோடு, அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டு இந்தியா, பிற நாடுகளில் பயங்கரவாத சதித்திட்டம் செய்வது போல் உள்ளதாக ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து இந்த படத்தை வெளியிட கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். ‛‛தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரெய்லர் என்பது மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத தீவிரவாதத்தின் மையமாக போலியாக நிலைநிறுத்துகிறது. இது சங்பரிவார் பிரசாரமாக உள்ளது. சங்பரிவார்கள் எந்தவித உண்மையும், ஆதாரமும் இன்றி இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள்'' என சாடினார்.
இதையடுத்து 10 காட்சிகள் நீக்கப்பட்டன. 32 ஆயிரம் பெண்கள், 3 பெண்களாக மாற்றப்பட்டன. இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் திரைப்படம் திரையிடப்பட்டால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனால் தமிழ்நாட்டில் நாளை இந்த படம் வெளியாகுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தான் டிஜிபி சைலேந்திர பாபு இன்று அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ‛தி கேரளா ஸ்டோரி' வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படம் பார்க்க வருபவர்களை முறையாக சோதனை நடத்த வேண்டும். அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளம் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைத்தால் அதனை கண்காணித்து தடுக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய சுவரொட்டிகள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் '' என்பன போன்ற முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications