தமிழகத்தில் விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் இன்று மிக குறைவான பாதிப்பு.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடுமையாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் சென்னைக்கு அடுத்தபடியாக கடலூர், செங்கல்பட்டு, வேலூர், தேனி, கோவை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்படியான மரணம் நிகழ்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 112 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் இன்று 1044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தான் மிக அதிகபட்சமாக 25 ஒரே நாளில் பலியாகி உள்ளனர். அதேபோல் சென்னையில் தான் அதிகபட்சமாக 997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் இன்று 487 பேருக்கும், திருவள்ளூரில் 472 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 342 பேருக்கும், தூத்துக்குடியில் 311 பேருக்கும், தேனியில் 278 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 179 பேருக்கும், கடலூரில் 170 பேருக்கும், கன்னியாகுமரியில் 175 பேருக்கும், கோவையில் 112 பேருக்கும், மதுரையில் 106 பேருக்கும், புதுக்கோட்டையில் 150 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

100க்கும் கீழ் பாதிப்பு

100க்கும் கீழ் பாதிப்பு

அரியலூரில் 36 பேருக்கும், தர்மபுரியில் 17 பேருக்கும், திண்டுக்கல்லில் 71 பேருக்கும், ஈரோட்டில் 40 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் 18 பேருக்கும், கரூரில் 50 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 13 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 52 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 31 பேருக்கும் நீலகிரியில் 36 பேருக்கும், பெரம்பலூரில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்கு எவ்வளவு

எங்கு எவ்வளவு

ராமநாதபுரத்தில் இன்று 20 பேருக்கும், ராணிப்பேட்டையில் 143 பேருக்கும், சேலத்தில் 159 பேருக்கும், சிவகங்கையில் 69 பேருக்கும், தென்காசியில் 121 பேருக்கும், தஞ்சாவூரில் 79 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் 12 பேருக்கும், திருவண்ணாமலையில் 112 பேருக்கும், திருநெல்வேலியில் 26 பேருக்கும், திருச்சியில் 136 பேருக்கும், திருப்பூரில் 27 பேருக்கும், வேலூரில் 179 பேருக்கும் விருதுநகரில் 67 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேருக்கும் இன்று தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் 9 பேர் மரணம்

கடலூரில் 9 பேர் மரணம்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 25 பேரும், கடலூரில் 9 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், தேனியில் 7 பேரும், வேலூரில் 7 பேரும், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தலா 6 பேரும், கோவையில் 5 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அரியலூரில் 2 பேரும், திண்டுக்கல்லில் 2 பேரும் கள்ளக்குறிச்சியில் ஒருவரும் பலியாகி உள்ளனர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவர் கொரோனாவால் இன்று பலியாகி உள்ளனர். சிவகங்கை, திருவண்ணாமலை, திருநெல்வேலியில் தலா 3 பேரும் திருச்சி, சேலம், புதுக்கோட்டையில் தலா 2 பேரும் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+