பொறுக்க முடியாது! திமுக கையில் வந்த "ரிப்போர்ட்" அஸ்திரம்.. களமிறக்கப்பட்ட டிஆர்பி.. பரபரக்கும் ஐடி!
சென்னை: திமுக ஐடி விங் சார்பாக புதிதாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது. அதன் செயலாளராக எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது எதிர்கட்சிகளை சமாளிக்கும் வகையில் புதிய துறை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அது என்ன துறை.. திமுகவின் இந்த மூவிற்கு பின் என்ன காரணம் என்று பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. முக்கியமாக ஆளும் கட்சிக்கு எதிராக அதிக அளவில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக ஆளும் திமுக தரப்பு குற்றச்சாட்டு வைத்து வருகிறது.
சமீபத்தில் இது பற்றி முதல்வர் ஸ்டாலின் நேரடியாக புகார் அளித்து இருந்தார். தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

ஐடி விங்
சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கோவில்கள் இடிக்கப்படுவதாக பொய்யான பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வந்தது
அதேபோல் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கடுமையாக உத்தரவிட்டு இருந்தார். சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் இதற்காக என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய சிலரும் கடந்த சில நாட்களில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.

திமுக ஐடி விங்
கடந்த பட்ஜெட்டில் கூட சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க புதிய மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் அறிவித்தார். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகள், அவதூறுகள், வெறுப்பு கருத்துக்களை கண்காணிக்கும் விதமாக இந்த மையம் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படும் நபர்கள் இதில் கண்காணிக்கப்படுவார்கள். அதன் மூலம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

டிஆர்பி ராஜா
இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் திமுக ஐடி விங்கின் புதிய செயலாளராக எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திமுக ஐடி விங்கில் முக்கிய மாற்றங்களை விரைவில் கொண்டு வருவேன். நம்மிடம் இருக்கும் கட்டமைப்பை முழுமையாக அறிந்துகொண்டு விரைவில் புதிய முயற்சிகள் துவங்கும் என்று டிஆர்பி ராஜா குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் திமுக ஐடி விங் சார்பாக @ITWreports என்ற கணக்கு துவங்கப்பட்டு உள்ளது.

ரிப்போர்ட்
@ITWreports என்பது எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளை ரிப்போர்ட் செய்யும் ஐடி ஆகும். திமுக பற்றி பரவும் வதந்திகளை பற்றி திமுகவினர் அல்லது திமுக ஆதரவாளர்கள் இந்த கணக்கில் புகார் அளிக்க முடியும். அந்த வதந்திகளுக்கு திமுக தரப்பு விளக்கம் அளிக்கும். அவதூறாக இருக்கும் பட்சத்தில் போலீஸ் தரப்பில் நேரடியாக புகார் அளிக்கப்படும் என்று திமுக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்துள்ளனர். அடிக்கடி இப்போது ஆளும் தரப்பிற்கு எதிராக செய்தி போடுறாங்க.. உண்மையே இல்லாத செய்திகளை பரப்புறாங்க.

துபாய் பயணம்
முதல்வரின் துபாய் பயணம் பற்றி கூட அவதூறு பரப்புனாங்க. இதை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால்தான் ரிப்போர்ட் செய்வதற்கு என்று இந்த கணக்கை தொடங்கி இருக்கிறோம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று கூட முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை எடிட் செய்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் பாஜக இளைஞர் அணி நிர்வாகி S.A விக்னேஷ் சமூகவலைதளத்தில் தலைவர்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டது பெரிய சர்ச்சையானது.

கைது
இதையடுத்து கரூர் மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி தீபக் கரூர் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதன்பின் அந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதேபோல்தான் இனி வரும் நாட்களில் இணையத்தில் பரப்பப்படும் வதந்திகளை களையும் வகையில் திமுக இந்த புதிய துறையை உருவாக்கி உள்ளது. இந்த துறை எம்எல்ஏ டிஆர்பி ராஜா நேரடி கண்காணிப்பில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications